மீண்டும் பாதுகாப்பு அமைச்சரானார் பெர்னாண்டஸ்
டெல்லி:
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக மீண்டும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த்துக்குத்தான் இப்பதவி என்று முதலில் கூறப்பட்டது. ராஜீவ் காந்திஅமைச்சரவையில் இதே பதவியை இவர் வகித்திருந்ததாலும், காஷ்மீர் பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசின்தூதுவராக இவர் சிறப்பாகச் செயல்பட்ட காரணத்தாலும் இவருக்கு அப்பதவி அளிக்கப்படுகிறது என்றும்பரவலாகக் கூறப்பட்டது.
ஆனால், தெஹல்கா ஊழல் காரணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபெர்னாண்டசையே மீண்டும் அப்பதவிக்கு நியமிக்க பிரதமர் வாஜ்பாய் விரும்பினார். திரிணாமூல் காங்கிரசும்இதை வரவேற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டசே மீண்டும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற ஒரு எளிய பதவியேற்பு விழாவில், பெர்னாண்டசுக்கு ஜனாதிபதிகே.ஆர். நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில், துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த், வாஜ்பாய் மற்றும் மக்களவை சபாநாயகர் ஜி.எம்.சி. பாலயோகிஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், கடந்த ஆண்டு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ஹாரின் பாதக், இன்றுமீண்டும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.ஆயுத உற்பத்தித் துறை இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
பெர்னாண்டஸ் திரும்பவும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதற்கு காங்கிரசும் கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன. தெஹல்கா ஊழலில் சிக்கியுள்ள பெர்னாண்டசுக்கு எப்படி மீண்டும் அமைச்சர் பதவிகொடுக்கலாம் என்று அவை போர்க்கொடி தூக்கியுள்ளன.
மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் பெர்னாண்டசுக்கு மீண்டும் அமைச்சர் பதவிகொடுத்திருப்பதைக் கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஆனால் வாஜ்பாயோ, "பெர்னாண்டஸ் தானாகத்தான் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஒன்றும்குற்றவாளி இல்லை. அவரை அமைச்சரவைக்குத் திரும்ப அழைத்ததிலும் தவறு ஒன்றும் இல்லை" என்றுகூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications