கோவையில் போலீசாருக்கே மருத்துவ சான்றிதழ் வழங்கிய போலி டாக்டர் கைது
கோயம்புத்தூர்:
போலீசாருக்கே போலி மருத்துவ சான்றிதழ் வழங்கி வந்த போலி டாக்டர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
கோவை சுந்தராபுரம் பகுதி குறிஞ்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் கிளினிக் வைத்து, பொதுமக்களுக்கு சிகிச்சைஅளித்துவருபவர் கிருஷ்ணமூர்த்தி.
இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சிலர் கோவை மாவட்ட எஸ்.பி. சொக்கலிங்கத்திற்கு புகார் கடிதம்எழுதினார்கள்.
உடனே இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உளவுப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டத்ை தொடர்ந்து,உளவுப் போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் நடவடிக்கைகளைக் கண்காணித்துவந்தனர்.
இந்த விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி ஒரு போலி டாக்டர் என்பதும், அவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவர்என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் திடீர் சோதனை போட்டனர்.
அப்போது கிருஷ்ணமூர்த்தியின் கிளினிக்கில் இருந்து, "கிருஷ்ணமூர்த்தி எம்.பி.பி.எஸ்., அசிஸ்டன்ட் சிவில் சர்ஜன்"என்று அச்சிடப்பட்டிருந்த லெட்டர் பேடும், "கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்" என்ற ரப்பர் ஸ்டாம்பும்போலீசாருக்குக் கிடைத்தது.
மேலும் அவர் சட்டக்கல்லுதாரி மாணவர் என்பதற்கான அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போத்தனூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தனர்.
பிறகு அவரை விசாரித்ததில் பல போலீசார்களுக்கு விடுப்பு வாங்குவதற்கான போலி மருத்துவச் சான்றிதழ்கள்உட்பட, அரசு மருத்துவர் என்ற பெயரில் பல போலி சான்றிதழ்களை அவர் வழங்கி வந்ததும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications