சென்னை விமான நிலையத்தில் நடந்த பெரும் குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விமான நிலையங்களில் மிக பலத்த பாதுகாப்பும் கண்காணிப்பும் போட்டுள்ளதாக மத்திய, மாநில அரசுகள் கூறிக்கொண்டாலும் உண்மையில் சோதனைகள் போதுமான அளவில் இல்லை என்பதை கடந்த வாரம் நடந்த ஒருசம்பவம் வெளிப்படுத்திவிட்டது.

சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானத்தில் ஏற்றப்பட்டிருக்க வேண்டிய பெட்டி மும்பை செல்லவேண்டிய விமானத்தில் ஏற்றப்பட்டது. இத்தனைக்கும் அவை இரண்டுமே இரு வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவிமானங்கள்.

கடந்த 12ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் டெல்லி செல்ல வந்த பயணியின் பெட்டி சோதனை செய்யப்பட்டபின் காணாமல் போனது. சோதனைக்குப் பின் அவரிடம் வந்து சேர வேண்டிய அந்தப் பெட்டி வந்து சேரவில்லை.

இதையடுத்து அவர் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். உடனே அதிகாரிகள் பெட்டியைத் தேடஆரம்பித்தனர்.

அதே நேரத்தில் மும்பை செல்ல இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அந்தப் பெட்டி தவறுதலாகஏற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த அதிகாரிகள் அந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டனர்.

ஆனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமோ தனது பயணிகளின் பெட்டிகள் மட்டுமே விமானத்தில் கடும் சோதனைக்குப்பின் ஏற்றப்பட்டுள்ளதாகவும் விமானத்தில் ஏற்றப்பட்ட அனைத்துப் பெட்டிகளுக்கும் கணக்கு உள்ளதாகவும்கூறிவிட்டது.

இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மும்பை புறப்பட்டுச் சென்றுவிட்டது. அந்த விமானம் புறப்பட்ட பிறகு தான்அதில் ஏற்றப்பட்டிருக்க வேண்டிய ஒரு பெட்டி தனியே கிடந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்தப் பெட்டிக்குப் பதிலாக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயணியின் பெட்டி ஜெட் ஏர்வேஸ் விமானத்தில்ஏற்றப்பட்டுள்ளது. இந்தியன் ஏர்லைன்ஸ் பயணியின் பெட்டி என்பதைக் குறிக்கும் அடையாள அட்டை (டேக்)கட்டப்பட்டிருந்த அந்தப் பெட்டி எப்படி ஜெட் விமானத்தில் ஏற்றப்பட்டது என்று தெரியவில்லை.

இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் விமானம் மும்பை சென்றிறங்கியது. அதிலிருந்து இறக்கப்பட்ட இந்தப் பெட்டியைமட்டும் யாரும் எடுக்கவில்லை. இந்தப் பெட்டியை உடனடியாக தனியே எடுத்து வைக்குமாறு இந்தியன்ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஜெட் ஏர்வேசுக்குத் தகவல் கொடுத்தனர்.

இந்தப் பெட்டி பின்னர் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல சென்னையிலேயே விட்டுச்செல்லப்பட்ட பயணியின் பெட்டி மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்க விமானத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின் விமான நிலையங்களில் பெட்டிகள் பல முறைசோதனையிடப்படுகின்றன. சோதனை செய்யப்பட்ட பின்னர் அவற்றை அதன் உரிமையாளர்கள் கூட தொடஅனுமதிப்பதில்லை.

இந் நிலையில் ஒரு விமானத்தில் செல்ல வேண்டிய பெட்டியை இன்னொரு விமானத்தில் ஏற்றும் அளவுக்குசென்னை விமான நிலையத்தில் குளறுபடி நடந்துள்ளது. இது பெட்டிகளை ஏற்றும் ஊழியர்களின் தவறா அல்லதுயாரோ வேண்டுமென்றே செய்த செயலா என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர் விமானத்துறையினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+