அதிமுகவில் இணைந்த 2 முக்கிய திமுக புள்ளிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான விருதுநகர் பெ. சீனிவாசனும், சைதை துரைசாமியும் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) அதிமுகவில் சேர்ந்தனர்.
தமிழக சட்டசபையின் முன்னாள் துணை சபாநாயகர் விருதுநகர் பெ. சீனிவாசன். இவர் திமுகவிலிருந்து விலகிஅதிமுகவில் இணைந்தார்.
அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏவான சைதை துரைசாமியும் அதிமுகவில் சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
மேலும், சென்னை மாநகராட்சியின் 126வது வார்டு திமுக உறுப்பினரான விஜயகுமாரியும் நேற்று அதிமுகவில்சேர்ந்தார்.












Click it and Unblock the Notifications