அதிமுகவுடன், திமுகவை ஒப்பிடக் கூடாது- கருணாநிதி
சென்னை:
அதிமுகவுடன், திமுவை ஒப்பிட்டுப் பேசுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதிகூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் தலைமையிலான அணியின் தலைவர்கள், தமிழகத்தில்அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான், இரண்டும் ஊழலில் திளைத்த கட்சிகள் தான் என்று பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:
கடந்த திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும், உள்ளாட்சிப் பொறுப்புகளில் இருந்துகொண்டு திமுகவினர்செய்த சாதனைகளையும் சொல்லி நாங்கள் ஓட்டுக் கேட்கிறோம்.
ஆனால் உச்சநீதி மன்றத் தீர்ப்பால் பதவியிழந்த ஜெயலலிதா, கருணாநிதியும் அவரது குடும்பமும் தான் என்னைபதவியில் இருந்து இறக்கிவிட்டார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்து ஓட்டுக் கேட்கிறார்.
இதில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் அதிமுகவும், திமுகவும் ஒன்றுதான் என்றும், 2டிவிக்களும் ஒன்றுதான் என்றும் பேசிவருபவர்கள், குறிப்பாகத் திமுகவைக் குற்றம் சாட்டுபவர்கள் தங்களைஒருமுறை சுற்றிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு ஜனநாயகத்தின் பண்பாட்டையே சல்லடைக் கண்ணாகத் துளைத்தவர்களோடு எங்களை ஒப்பிட்டுப்பேசுவது திட்டமிட்ட சதிதான்.
மேலும் பல ஆண்டுகளாக திமுக ஆட்சியையும், அதிமுக ஆட்சியையும் பார்த்துவிட்டோம், இனிமேல் காங்கிரஸ்ஆட்சியைப் பார்ப்போம் என்று சிதம்பரம் கூறிவருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியையும் பார்த்துவிட்டோம் என்று அவர்களுக்கு உணர்த்தும் வகியில் வாக்காளர்களின் முடிவுஇருக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications