தாஜ்மகாலுக்குள் புகுந்து பா.ஜ.கவினர் ரகளை
Subscribe to Oneindia Tamil
ஆக்ரா:
பாரதிய ஜனதா கட்சித் (பாஜக) தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) தாஜ்மகாலுக்குள் புகுந்து ரகளைசெய்தனர்.
மாநாட்டுக்கு வந்திருந்த பல தொண்டர்கள் தாஜ்மகாலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் திடீரென்று வன்முறையில்ஈடுபட்டனர்.
அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள். நிற்பதற்குக் கூட தடை விதிக்கப்பட்டிருந்த புல்வெளிகளில் புகுந்து, அங்கும் இங்குமாக ஓடினார்கள். அங்கிருந்த நீரூற்றுகளில் உள்ள தண்ணீரை எடுத்து கை,கால், முகம் கழுவினார்கள்.
இதைக் கண்டு, அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களைத் தட்டிக் கேட்டனர். இதனால்ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள், போலீசாரையும் கடுமையாகத் தாக்கினார்கள். இதில் சில போலீசார்காயமடைந்தனர்.
இருந்த போதிலும், தாஜ்மகாலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications