விஷச் சாராய சாவு ... மெத்தனாலை சப்ளை செய்த 7 பேர் கைது
சென்னை:
சென்னை அருகேயுள்ள செங்குன்றம், அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து 34 பேர் இறந்துபோன சம்பவத்தில் மெத்தனாலை சப்ளை செய்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
சில தினங்களுக்கு கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் மெத்தானால் என்ற கொடிய விஷ திரவம்கலந்த விஷச்சாராயத்தை குடித்தனர். இதனால் 34 பேர் இறந்து போனார்கள். 10க்கும் அதிகமானவர்கள்கண்பார்வையை இழந்தனர்.
சாராயத்தை வியாபாரம் செய்த கஸ்தூரி என்பவரையும், அவரது மகன் பார்த்திபன் என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர்.
இந்நிலையில் மெத்தனாலை சப்ளை செய்த நிறுவனத்தின் உரிமையாளர், அந்த நிறுவனத்தின் மானேஜர், மற்றும்மெத்தனாலை வாங்கி விற்கும் புரோக்கர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பரம்வீர் சிங் ச்ெயதியாளர்களிடம் கூறுகையில்,
கோட்டூர் விஷச் சாராய சம்பவத்தில் மெத்தனாலை சப்ளை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க தனிபோலீஸ்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணிையில் ஈடுபட்டனர்.
விசாரணையின் போது "பாரமவுண்ட் கெமிக்கல்ஸ்" என்ற நிறுவனம்தான் மெத்தனாலை சப்ளை செய்ததுதெரியவந்தது. இந்த நிறுவனம் உரிமம் பெறாமல் மெத்தனாலை சப்ளை செய்திருப்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பாரமவுண்ட் கெமிக்கல்சின் உரிமையாளர் மேக்காராம் சவுத்திரி (63), மானேஜர்ஆனந்தராமன் (35) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த நிறுவனத்திலிருந்து மெத்தனாலை வாங்கி விற்பனை செய்த புரோக்கர்கள் அபுபக்கர் (38), காஜாமொகைதீன் (27), குள்ள காஜா (29), கோவிந்தசாமி (51), கருணா (31) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
31 லிட்டர் மெத்தானாலை ரூ.2 ஆயிரத்து 500க்கு கஸ்தூரிக்கும், பார்த்திபனுக்கும் குள்ள காஜாவும், காஜாமைதீனும் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
பாரமவுண்ட் கெமிக்கல்ஸ் கம்பெனி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 35 லிட்டர் மெத்தனால்கைப்பற்றப்பட்டுள்ளது.
சென்ற 3 நாட்களில் மட்டும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற சாராய வேட்டையின் போது 524பெண்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ரூ.91 லட்சத்து 68 ஆயிரத்து 522 மதிப்புள்ள சாராயம் மற்றும் வாகனங்கள்கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications