காலின் பாவலுக்கு சிறப்பு வரவேற்பு தர மறுத்த இந்தியா
டெல்லி:
இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலுக்கு வழக்கமாகத் தரப்படும் சிவப்புக்கம்பள வரவேற்பை இந்தியா அளிக்கவில்லை.
நேற்று பாகிஸ்தான் சென்ற அவர் அந் நாட்டுக்கு பொருளாதார, ஆயுத உதவிகள் வழங்குவது குறித்து அதிபர்பர்வேஸ் முஷாரபுடன் பேச்சு நடத்தினார்.
பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் தான் முக்கியப் பிரச்சனையாக உள்ளது என்று பாவல்பேசினார்.
இதற்கு இந்தியா உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. அவர் பாகிஸ்தானில் இருந்து விமானத்தில் இந்தியா வந்துகொண்டிருக்கும்போதே அவரது கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்து அறிக்கைவெளியிட்டுவிட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையே தீவிரவாதம் தான் பிரச்சனையாக உள்ளது. காஷ்மீர் அல்லஎன்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய காலின் பாவலுக்கு சிறப்பான வரவேற்பு எதையும் இந்தியாஅளிக்கவில்லை. அவரை இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சோகிலா ஐயர், அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் லலித் மான்சிங், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் ஆகியோர் விமான நிலையத்தில்வரவேற்றனர்.
அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கையும் பின்னர் பிரதமர் வாஜ்பாயையும் சந்தித்துப்பேசுவார். நாளை அவர் அமெரிக்கா திரும்புவார்.
காலின் பாவல் இந்தியா வரும் நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா திடீர் தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.நேற்று இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 11 கண்காணிப்புக் கூடாரங்களும் பதுங்கு குழிகளும்அழிக்கப்பட்டன.
30 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தீவிரவாதிகளை இது போலத் தாக்குவோம் எனவும்இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இவை எல்லாமே பாகிஸ்தானை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பியுள்ள கோபமான சிக்னல்கள்தான் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications