கோவை வாக்குச் சாவடிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை:
கோயம்புத்தூரில் வாக்குச் சாவடிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததயைடுத்து ஓட்டுப் போட வந்த மக்கள் மிரண்டுஓடினர்.
கோயம்புத்தூரில் கணபதி நகர் மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் இன்று காலைஅமைதியாக வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது.
அந் நிலையில் திடீரென வாக்குச் சாவடிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. ஓட்டு போடவந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தேர்தல் பணியாளர்கள் வெளியிலும் போக முடியாமல் உள்ளேயும்உட்கார முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து 3 மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். ஓட்டுப் பெட்டிகள் முதல் அந்தச்சாவடியின் கழிவறை வரை அனைத்தையும் தீவிரமாக சோதனையிட்டனர்.
ஆனால், குண்டு ஏதும் சிக்கவில்லை. இந்த களேபரம் காரணமாக வாக்குப் பதிவு 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
இச் சம்பவத்தையடுத்து கோவை நகரின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெடிகுண்டு சோதனைநடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications