புகை பிடிக்க தடை... அடுத்த சட்டசபை கூட்டத்தில் மசோதா தாக்கல்
சென்னை:
தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றிக்கு தடை விதிக்கும் மசோதாதமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறைச்செயலாளர் சையத் மூனீர் ஹோதா தெரிவித்துள்ளார்.
கடந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தின்போது, தமிழகத்தில் பொது இடங்களில் புகைபிடிப்பதும், எச்சில் துப்புவதும்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஹோதா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பொது இடங்களில் புகை பிடிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றிற்கு தடை விதிக்கும் மசோதாவை தயாரிக்கும்பணி நடைபெற்று வருகிறது.
பான் மசாலா, குட்கா போன்றவற்றை தடை செய்வதற்கான மசோதாவும் தயாராகி வருகிறது. இந்த மசோதாக்கள்தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதுஎன்றார் ஹோதா.












Click it and Unblock the Notifications