உள்ளாட்சித் தேர்தல்... தொடங்கியது முதல்கட்ட வாக்குப் பதிவு
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 7.30 மணிக்குத்தொடங்கியது.
சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 4 மாநகராட்சிகளிலும், 44 நகராட்சிகளிலும் 302பஞ்சாயத்துக்களிலும் 189 ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.
மழை காரணமாக ஆரம்பத்தில் சற்றே மந்தமான வாக்குப் பதிவுதான் நடந்தது. ஆனால் நேரம் போகப்போகவாக்குப் பதிவு சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி பாதுகாப்புக்காக 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
