முஷாரபுடன் காலின் பாவல் பேச்சு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் அந் நாட்டு அதிபர் பர்வேஸ்முஷாரபுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காலின் பாவலின் வருகைக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டங்கள்நடத்தி வருகின்றன. இதனால் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே பாவல் பாகிஸ்தான் வந்துள்ளார்.
இன்று அப்துல் சத்தாருடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலாளர்காண்டலீஸ்ஸா ரெய்சும் உடனிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தை மிக நீண்ட நேரம் நடந்தது.
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு பாகிஸ்தான் வந்த முதல் அமெரிக்க தலைவர் இவர் தான்.அடுத்து இன்று மாலை அவர் இந்தியா வருகிறார்.
பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையை சமாளிப்பது, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்க நிதிஉதவி அளிப்பது ஆகியவை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு சிக்கல் குறித்தும்அவர்கள் பேச்சு நடத்தினர்.
காலின் பாவலின் வருகையை ஒட்டி இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.கடந்த 10 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்துள்ள பெரிய சண்டை இது தான்.
எல்லையில் நுழைந்து கண்ணி வெடிகளை வைக்க முயன்ற தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தின் லோக்கல்பட்டாலியன் சுட்டுத் தள்ளியது.
காஷ்மீர் பிரச்சனை குறித்து காலின் பாவல் பேச வேண்டும் என பாகிஸ்தான் நிர்பந்தித்து வருகிறது.
ஆனால், காஷ்மீர் தீவிரவாதம் குறித்தும், இந்தத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் பயிற்சி மற்றும்இந்தத் தீவிரவாதிகளின் முகாம்களையும் அமெரிக்கா அழிப்பது ஆகியவை குறித்து மட்டுமே பேச இந்தியாதயாராக உள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா உள்பட எந்த நாடு தலையிடுவதையும் இந்தியாஅனுமதிக்கத் தயாராக இல்லை.
ஆனால், இன்று காலின் பாவலை அப்துல் சத்தார் சந்தித்தபோது காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சர் செளகத்அஜீசும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் கிளப்பியிருக்கும்என்று தெரிகிறது.
இந்தச் சந்திப்பையடுத்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபையும் காலின் பாவல் சந்திக்கிறார்.
இந் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பிரச்சனை உச்சகட்டத்தில் உள்ள நிலையில் இந்தியாவுமபாகிஸ்தானும் மோதலைத் தவிர்க்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications