எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் தொடர்ந்து சண்டை
ஜம்மூ:
காஷ்மீர் எல்லையில் இந்திய-பாகிஸ்தானிய படையினர் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளது.
நேற்றும் அதே போல தீவிரவாதிகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய உதவிக் கொண்டிருந்த பாகிஸ்தானியகண்காணிப்புக் கூடாரங்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 11 கூடாரங்களும்,பாகிஸ்தானிய ராணுவத்தின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
இந்தத் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய உதவுவதற்காக கண்ணி வெடிகளை வைத்து அக்கனூர்பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர்களை பாகிஸ்தானியர்கள் அழித்தனர். மின்வினியோகம் பாதிக்கப்படும் அந்தஇருட்டை பயன்படுத்தி தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இதை அறிந்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் படைகள் மீது திடீரென கடும் தாக்குதல் நடத்தியது.இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 12 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் தரப்பில்பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு முழுவதும் இந்திய ராணுவத்தினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது(பி.எஸ்.எப்.) பாகிஸ்தானிய ராணுவமும், அவர்களின் எல்லைப் பாதுகாப்புப் படையான ரேஞ்சர்ஸ்களும்தொடர்ந்து துப்பாக்கிகளால் சுட்டனர்.
இந்தியப் படையினரும் திருப்பிச் சுட்டவண்ணம் இருந்தனர். இதில் நிக்கோவால் எல்லைக் கண்காணிப்புமையத்தில் இருந்த பி.எஸ்.எப். வீரரான அபிமன்யு துபே என்பவரும் ஜஸ்வந்த சிங் என்ற அப் பகுதி பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தனர்.
வழக்கமாக கதுவா, ஆர்.எஸ்.புரா, சம்பா ஆகிய பகுதிகளில் இந்திய-பாகிஸ்தானிய படையினர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபடுவது உண்டு. ஆனால், நேற்று இந்த மோதல் அக்கனூர் பகுதிக்கும் பரவியது.
இன்றும் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் ராணுவத்தினரும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications