விருதுநகர் அருகே போலீஸ் துப்பாக்கிச் சூடு
அருப்புக்கோட்டை:
தமிழகத்தில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்லுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவில் பெரும் அளவிலானவன்முறைகள் நடந்தன.
பல இடங்களில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன. தெலுங்கு பட ஸ்டைலில் வாக்குச் சாவடிகளுக்குள் 10, 15 பேர்கொண்ட கும்பல்கள் நுழைந்து மொத்தமாய் ஓட்டுபோட்டுவிட்டு நிதானமாக வெளியே நடந்து சென்றுள்ளனர்.
பல இடங்களில் காவலுக்கு நின்றிருந்த போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் கள்ள ஓட்டுப் போடுவதில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்தபோட்டியில் வன்முறை வெடித்தது.
இங்கு ஒரு வேட்பாளருக்கு கள்ள ஓட்டு போடுவதற்காக சென்னையிலிருந்து பெரிய கும்பல் வந்திறங்கியிருந்தது.இவர்களை போட்டி கள்ள ஓட்டுக் கும்பல் தட்டிக் கேட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் இறங்கினர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஆயுதங்கள்வந்திறங்கின. அரிவாள், கத்தி, கையெறி குண்டுகள், ஈட்டிகள் என தலிபான்களைப் போல மாறி ஒருவர் மீதுஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்த போலீசார் பின்னர் சுதாரித்துக் கொண்டு அவர்களை தடியடி நடத்தி கலைக்கமுயன்றனர். ஆனால், அந்தக் கும்பல்கள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். கடைகளுக்குள் புகுந்து கிடைத்ததை அள்ளிக் கொண்டுஓடினர். கலவரத்தில் சிக்கிய பொது மக்கள் சிதறியடித்து ஓடினர். அந்தக் கும்பல்கள் கடைகளுக்கும் தீ வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அங்கு விரைந்து வந்தார். உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக்கலைக்க உத்தரவிட்டார். போலீசார் வானை நோக்கி சுட ஆரம்பித்த பின்னர் தான் அந்த கும்பல்கள் கலைந்துஓடின.
சம்பவத்தையடுத்து அங்கு வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தக் கிராமத்தில் இன்னும் பதற்றம் நிலவுகிறது.ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவை மீண்டும் துவங்குவதற்காக இரு கும்பல்களையும்அழைத்து சமாதானம் பேசி வருகிறார்கள் போலீசார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications