வாக்குச் சீட்டுகளை அள்ளிக்கொண்டு ஓடிய வன்முறை கும்பல்
சென்னை:
சென்னை-துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்த வாக்குச்சீட்டுக்களை அள்ளிக் கொண்டு ஓடிவிட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் தொடங்கியது. காலையில்அமைதியாகதொடங்கிய வாக்கு பதிவில் 11 மணிக்கு மேல் வன்முறை வெடித்தது சென்னையின் பல இடங்களிலும்அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். வாக்கு சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டனர்.
துறைமுகம் பகுதியையும் விட்டு வைக்கவில்லை வன்முறை கும்பல். துறைமுகம் தொகுதி, ராமசாமி தெருவிலுள்ளவாக்கு சாவடியில் நுழைந்த வன்முறை கும்பல் கள்ள ஓட்டு போட்டுவிட்டு, வாக்குச் சீட்டுக்களையும் தூக்கிச்சென்றுவிட்டது.
இது குறித்து அங்கு தேர்தல் பணயில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி நந்தகுமார் கூறுகையில்,
காலை 11.05 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் வாக்கு சாவடிக்குள் நுழைந்தது. என்ன நடக்கிறது என்றுசுதாரிப்பதற்கு முன்பாகவே வாக்காளர்களை அப்புறப்படுத்திய அந்தக் கும்பல் விறுவிறுவென்று கள்ள ஓட்டுபோடத் தொடங்கிவிட்டது.
அதன் பின் 3 வாக்குச்சீட்டு கட்டுகளையும் (150 வாக்குச் சீட்டுகள்) எடுத்துக் கொண்டு தாங்கள் வந்தவாகனங்களில் சென்றுவிட்டனர். சற்று நேரம் கழித்து சில வாக்குச் சீட்டுகளை மட்டும் கொண்டு வந்து போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
2 போலீசார் மட்டுமே காவலுக்கு இருந்தனர். ஆனால் அவர்கள் இவ்வளவையும் பார்த்துக் கொண்டு சும்மாவேநின்று கொண்டிருந்தனர் என்றார் நந்தகுமார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications