அதிமுக முறைப்படிதான் தேர்தல் நடக்கிறது: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் நடந்துவரும் உள்ளாட்சித் தேர்தல் அதிமுக முறைப்படிதான் நடக்கிறதே தவிர, தேர்தல் முறைப்படிநடக்கவில்லை என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி குற்றம் சாட்டினார்.
சென்னை மேயர் தேர்தலுக்காக செவ்வாய்க்கிழமை (இன்று) வாக்களித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவினர் கணக்கே இல்லாமல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வாக்குச் சாவடிகளைஅதிமுகவினர் கைப்பற்றி அவர்களது இஷ்டத்திற்கு கள்ள ஓட்டுக்களைப் போட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
பல வாக்குச் சாவடிகளில் அதிகாரிகளை வெளியேற்றி விட்டு அதிமுகவினரே ஓட்டுப் போட்டுள்ளனர். தமாகாமாநகராட்சித் தலைவர் வெற்றிவேல் முன்னிலையில் பல இடங்களில் அதிமுகவினர் கள்ள ஓட்டுக்களைப்போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைப் போலீஸாரும் தடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் நான் ஏற்கனவே தேர்தல் கமிஷனருக்கும் மத்திய அரசுக்கும் புகார்கடிதம் கொடுத்திருந்தேன். ஆனால் சரியான நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதால்தான், இன்று ஏராளமானஇடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
தேர்தல் கமிஷன் அலுவலகத்துக்குப் போன் செய்தால், போன் மணி மட்டும்தான் அடித்துக் கொண்டிருக்கிறது.யாரும் எடுக்கவில்லை. அங்கே யாரும் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை.
ஆளுநருக்கு போன் செய்யலாம் என்று பார்த்தால், அவரும் இங்கு இல்லை. ஆந்திராவில்தான் அவர் இருக்கிறார்என்று சொல்லி விட்டார்கள்.
சரி, ஆளுநரின் செயலாளரையாவது பிடிக்கலாம் என்று போன் செய்தால், அவர் டெல்லி போய்விட்டார் என்றுசொல்கிறார்கள்.
மாநில அரசு சரியாக நடந்து கொள்ளாததால்தான் மத்திய அரசை நாடுகிறோம். ஆனால் மத்திய அரசும்இதையெல்லாம் கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications