ஒற்றுமையாக இருங்கள்: தமிழ் கட்சிகளுக்கு புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:
டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் தனியாகக்கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து வரும் "ஈழப் படை" என்றஅமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து, ஏராளமான துண்டுப் பிரசுரங்களையும் நோட்டீசுகளையும் ஈழப் படையைச் சேர்ந்தவர்கள்,விடுதலைப் புலிகளின் கைவசம் உள்ள மட்டக்களப்பு பகுதிகளில் விநியோகித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும். அவ்வாறு வராவிட்டால்அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டே விரட்டப்படுவார்கள் என்று அந்தத் துண்டுப் பிரசுரங்களில்கூறப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் சேர்ந்து போராடினால்தான் தமிழர்களின் பிரச்சனைகளைப் போக்கமுடியும்; ஈழத் தமிழர்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எந்தக் கட்சியாவது தனியாகப் போட்டியிட்டால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதற்கான விளைவுகளை அக்கட்சிசந்திக்க நேரிடும் என்றும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில் ஈழப் படை மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இதுதான் தக்க தருணம். இதை தமிழ்கட்சிகளின் அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஈழப் படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications