சென்னையில் சன் டிவி நிருபர் மீது அதிமுகவினர் தாக்குதல்
சென்னை:
இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தொடங்கிய உள்ளாட்சி தேர்தலின்போது வன்முறை வெடித்தது. இதைப்படம் பிடிக்க முயன்ற சன் டிவி நிருபர் மற்றும் காமிரா மேன் தாக்கப்பட்டனர்.
தமிழகத்தின் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை 7.30 மணிக்குவாக்குப்பதிவு தொடங்கியது. சென்னையில் முதலில் அமைதியாக நடந்து வந்த வாக்கு பதிவின்போது, காலை 9மணிக்கு மேல் திடீரென வன்முறை வெடித்தது.
திருவான்மியூரில் 155வது வார்டில் வாக்கு பதிவு நடந்த கொண்டிருந்த இடத்துக்கு அதிமுகவின் தென் சென்னைசெயலாளர் கராத்தே தியாகராஜன் தன் ஆதரவாளர்களுடன் வந்தார். அங்கு வாக்குப் பதிவு செய்ய வந்தவர்களைவிரட்டி விட்டு தேர்தல் அதிகாரியின் உதவியுடன் அவர் கள்ள ஓட்டுக்களைப் போட்டார்.
பின்னர் 9 மணிக்கெல்லாம் வாக்கு சாவடியை இழுத்து மூடிவிட்டார் கராத்தே தியாகராஜன். இதனால் அங்கு பெரும்பதட்டம் ஏற்பட்டது.
கராத்தே தியாகராஜனும் அவரது ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபடுவதை சன் டிவி ஒளிப்பதிவாளர் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த கராத்தே தியாகராஜனின் ஆதரவாளர்கள் அவரைநோக்கி பாய்ந்து ஓடி வந்தனர்.
இதையடுத்து, சன் டிவி காமிரா மேன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விடாமல் துரத்திய கும்பல் அவரைதாக்கி அவரிடமிருந்த காமிராவைப் பிடுங்கி உடைத்தது. காமிராவிலிருந்த காசெட்டையும் எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டது குறித்து மக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த சன் டிவிநிருபரும் தாக்கப்பட்டார்.
வன்முறை நடப்பதை கேள்விப்பட்டதும் திமுக ராஜ்யசபா எம்.பியும் நடிகருமான சரத்குமார், அந்தப் பகுதிக்குவிரைந்து வந்தார். அவருக்கும் கராத்தே தியாகராஜனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரும் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சரத்குமார் காரசாரமாக கராத்தே தியாகராஜனைகேள்வி கேட்க அதே தொனியில் கராத்தே தியாகராஜனும் பதில் அளிக்க, அந்த இடமே பெரும் பரபரப்புடன்காணப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications