சென்னை முழுவதும் மறு தேர்தல் நடத்த இளங்கோவன் கோ--ரிக்-கை
சென்னை:
சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை நடந்தததாலும், கள்ளஓட்டுக்கள் போடப்பட்டதாலும் மீண்டும் சென்னையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை சென்னையில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, அமைதியாக நடந்துகொண்டிருந்த தேர்தலில் திடீரென்று வன்முறை வெடித்தது. கள்ளஒட்டுகளும் போட்டப்பட்டன.
இதையடுத்து சென்னையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார். இது குறித்து அவர் சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை சென்னையில் நடந்த தேர்தலில் பெருமளவு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. சுமார் 300 வாக்குசாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. வாக்கு சீட்டுகளும் கிழித்து தெருவில் வீசப்பட்டிருந்தன.
சென்னையில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது குறித்து எங்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன்சென்று ஆளுனர் ரங்கராஜனை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம்.
தேர்தல் வன்முறை குறித்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா சென்னை நகர போலீஸ்கமிஷனர் முத்துகருப்பனுடன் தொலைபேசி மூலம் பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்துவிட்டார்.
கராத்தே தியாகராஜன் ரவுடி கும்பலுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டு பகிரங்கமாக கள்ள ஓட்டு போட்டுள்ளார்.அவரை போலீதார் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையில் மறு தேர்தல் நடத்தப்பட்டால் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றுகூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications