வாஜ்பாய் விருப்பமே எங்கள் விருப்பம்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போது மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று பிரதமருக்கு தெரியும். அவர்விரும்பும் போது மத்திய அமைச்சரவையில் பாமக. இடம் பெறும் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு விலகிய பாமக மற்றும் திரிணாமுல்காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் அக்கூட்டணியில் இணைந்துள்ளன.

கடந்த திங்கள்கிழமை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கும்அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது,

தெஹல்கா இன்டர் நெட் இணைய தளம் வெளியிட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர்பதவியை ராஜினாமா செய்த ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு மீண்டும் அதே பதவி கொடுக்கப்பட்டது. ஹரின் பதக்குக்குஇணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் விரும்பும்போது பாமக மத்திய அமைச்சரவையில் பாம-க இடம் பெறும் என்று டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார். இது குறித்து அவர் திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு மீண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள்வரவேற்கிறோம்.

முன்பே அவருக்கு மத்திய பாதுகாப்பு துறையை வழங்க வேண்டும் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.

பிரதமருக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்று தெரியும். அவர் விரும்பும் போது மத்திய அமைச்சரவையில்பாமக இடம் பெறும் என்றார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+