எதே ஹேமங் பதானியா.. அதுக்கு அந்த பிளமிங்கே பரவாலயேடா.. சிஎஸ்கே ரசிகர்களின் தெறி மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளமிங் விலகி இருப்பது அந்த அணியின் ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் ஸ்டீபன் இருந்த நிலையில், அதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒரு பெண் வந்து, "ரொம்ப நல்லப் பையன் மேடம்.. என்ன கஞ்சா மட்டும் இழுப்பான்" என்று நக்கலாக சொல்வார். அந்தப் பெண்ணை சிஎஸ்கே ரசிகராக மாற்றி, "நல்ல கோச் தான் மேடம்.. என்ன அகீல் ஹொசைனை மட்டும் அடிக்கடி பெஞ்ச் பண்ணிருவாரு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

memes fleming csk

சதுரங்க வேட்டை படத்தில் நட்டி, செட்டியாரை ஏமாற்றிய போது, "செட்டி உஷார் ஆகிட்டான்" என்று எஸ்கேப் ஆகிவிடுவார். அதில் போல் பயிற்சியாளர் பிளமிங் உடனான 18 ஆண்டுகள் கால உறவில் இருந்து சிஎஸ்கே நிர்வாகம் விலகிய நிலையில், நட்டியாக மற்ற அணி ரசிகர்களை மாற்றி, "சிஎஸ்கே உஷார் ஆயிட்டான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்படியாவது என்னைய மட்டும் காப்பாத்திருங்கடா ரகம்.

memes fleming csk

பைரவா படத்தில் டேனியல் பாலாஜி மனைவி இறப்புக்கு வரும் வில்லன் சிரித்து கொண்டே வருவார். இதனால் டேனியல் பாலாஜி கோபமாக பார்ப்பார். அப்படி சிஎஸ்கே அணி பிளமிங்கை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஹேமங் பதானியை கொண்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இதனால் டேனியல் பாலாஜியாக சிஎஸ்கே ரசிகர்களை மாற்றி, அவர்கள் கோபமாக பார்ப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடங்கொய்யால ரகம்.

memes fleming csk

வீர தீர சூரன் படத்தில் தங்களை எஸ்ஜே சூர்யாவிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வில்லன், காளிக்கு ஃபோன் போடு என்பார். அதுபோல் சிஎஸ்கே அணி ஒரு வழியாக ஃபிளமிங்கிடம் இருந்து விலகிய நிலையில், தங்களை காப்பாற்றிக் கொள்ள சிஎஸ்கே நிர்வாகம், காளிக்கு ஃபோன் போடு என்று ரெய்னாவை சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தொட்டாலே பட்டாசா தெறிக்கும் டென் டவுசண்ட் வாலா ரகம்.

memes fleming csk

காங்கிரஸ் உடனான கூட்டணியை முடித்து பின் ஸ்டாலின் செய்த சைகை ஸ்டீபன் பிளமிங் செய்வதாக மாற்றி, தோனி இல்லாமல் 20 தொடர்களில் சிஎஸ்கே, ஜேஎஸ்கே, டிஎஸ்கே என்று 3 அணிகளிலும் சேர்த்து 20 தொடர்களில் பிளமிங் கோப்பையை வெல்லாமல் சோலியை முடித்துவிட்டதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலி முடிஞ்ச் ரகம்.

memes fleming csk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+