மிஸ்கின் சொன்ன வார்த்தை.. செருப்பால அடிங்க, ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்.. ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் மிஸ்கின் ஒரு மேடையில் ஏறிவிட்டால் அங்கு கண்டன்ட் இல்லாமல் இருக்காது. படம் பற்றி இரண்டு வார்த்தை பேசி விட்டு எல்லாரையும் போல மேடையை விட்டு இறங்குபவர் கிடையாது. மனதில் என்ன தோணுகிறதோ அதை அப்படியே கொட்டிவிடுவார். சில நேரங்களில் அது கைதட்டலை வாங்கும். சில நேரங்களில் சர்ச்சையாகவும் மாறிவிடும். அதுபோலத்தான் இப்போது விஜய் சேதுபதியின் ட்ரெயின் பட விழாவில் மிஸ்கின் பேசிய ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு ப்ளூ சட்டை மாறன் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

ட்ரெயின் திரைப்பட இசை விழா

விஜய் சேதுபதி மிஸ்கின் நடிப்பில் உருவாக்கியுள்ள ட்ரெயின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி மற்றும் மிஸ்கின் பற்றி பலரும் தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதுபோல இந்த படத்தை மிஸ்கினை இயக்கியிருக்கிறார். படத்திற்கு அவரை இசையமைப்பு செய்திருப்பது கூடுதல் கவனம் பெற்று இருக்கிறது.

வழக்கம் போல மேடையில் தனது ஸ்டைலில் பேசிய மிஸ்கின் ட்ரெயின் படம் மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை தைரியமாக ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டார். அதாவது இந்த படம் நல்லா இல்லன்னா செருப்பால அடிங்க என்பது போல ஆவேசமாக பேசி இருந்தார். மிஸ்கினின் இந்த பேச்சை கேட்டு அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆனால் இந்த வரியை ப்ளூ சட்டை மாறன் பிடித்துக் கொண்டார்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு

ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், தங்கள் நேரம் மற்றும் பணத்தை செலவழித்து பார்க்கும் படம் நன்றாக இல்லை என்றால் மக்களால் புலம்ப தான் முடியும்... அந்த மொக்கை படம் எடுத்த பாவத்தை போக்கிக் கொள்ள நீங்கள்தான் உங்களை செருப்பால அடித்துக் கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டு இருக்கிறார். இவர் இப்படி போஸ்ட் போட்டதுதான் தாமதம் உடனே ரசிகர்கள் சிலர் மிஷ்கினை விமர்சிப்பதற்காகவே இந்த போஸ்டை ஷேர் செய்கின்றனர்.

இன்னும் ஒரு சிலர் மாறனை திருப்பி கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதாவது ப்ளூ சட்டை மாறன் பல வருடங்களாக திரைப்படங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். பெரிய நடிகர், பெரிய இயக்குனர்கள் என்றெல்லாம் பார்க்காமல் ஒவ்வொரு படத்திலும் குறைகளை பூதாகரமாக மாற்றி பேசுவார். இது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் அவர் என்னதான் இந்த படத்துக்கு சொல்லப் போகிறார் என்று கேட்பதற்கும் பல பேர் காத்திருக்கிறார்கள்.

Mysskin Blue Sattai Maran Vijay Sethupathi

நெட்டிசன்கள் கேள்வி

ஆனால் விமர்சகராக இருந்தவர் ஆன்ட்டி இந்தியன் படத்தை இயக்கிய போது அந்த படத்திற்கும் கலவையான விமர்சனங்களை கிடைத்தன. இதை வைத்து நெட்டிசன்கள், "மிஷ்கினை செருப்பால் அடித்துக் கொள்ள சொல்லுறீங்க அப்போ நீங்க எடுத்த படத்துக்கு என்ன பண்ணுனீங்க? அடுத்தவர்களின் படத்தை விமர்சனம் செய்வது ஈஸி. படம் எடுக்கும் போதுதானே கஷ்டம் தெரிந்திருக்கும்?" என்று ப்ளூ சட்டை மாறனையும் ரவுடி ரவுண்டு கட்டி வருகின்றனர்.

விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்
ஏற்கனவே இந்த விழாவில் இயக்குனர் அமீர், பார்த்திபன் உள்ளிட்டார் பேசிய விஷயங்களும் வைரலானது. விஜய் குறித்து அமீர் பேசும் போது ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்ததால்.. அவர் கடுப்பாகி இருந்தார். அதுபோல விசில் எனர்ஜி தான்.. ஆனால் பேசும்போது அடித்தால் தொந்தரவு என்று பார்த்திபனும் தன்னுடைய ஸ்டைலில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்ததும் பேசுபொருளாகியது.

இப்போது அதையெல்லாம் ஓரங்கட்டும் மிஷ்கினின் "செருப்பு" பேச்சு மொத்த கவனத்தையும் இழுத்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+