அமெரிக்காவைக் கலக்கும் ஆ ந்த்ராக்ஸ்
வாஷிங்டன்:
அமெரிக்காவை ஆந்த்ராக்ஸ் பயம் பயங்கரமாக உலுக்க ஆரம்பித்துள்ளது.
புளோரிடாவுக்கு கடிதம் மூலம்...
இந்தக் கட்டடத்துக்கு வந்த கடிதம் மூலமாகத் தான் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்கள் பரவியிருக்க வேண்டும் எனபோலீசார் கருதுகின்றனர்.
இதே போன்ற ஆந்த்ராக்ஸ் கடிதங்கள் பல அமெரிக்க எம்.பிக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதில் ஒருஎம்.பியின் அலுவலகத்தில் இருந்த 23 பேருக்கு ஆந்த்ராக்ஸ் தாக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
நியூயார்க் மேயர் அலுவலகத்தில்...
இந் நிலையில் நியூயார்க் மேயர் ரூடால்ப் கிலியானியின் அலுவலககக் கட்டடத்திலும் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியம்தாக்கியுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடம் மூடல்:
அதேபோல வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆப் ரெப்ரசன்டெடிவ்ஸ் அவைக்கட்டடத்திலும் ஆந்த்ராக்ஸ் கிருமி பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. இதில் பணியாற்றி வரும் 30 பேருக்குஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியுள்ளது.
இதையடுத்து அவையை 5 நாட்களுக்கு மூடிவிட அந் நாடு முடிவு செய்துள்ளது. இங்கு ஆந்த்ராக்ஸ் எதிர்ப்புமருந்துகள் தூவப்பட்டு வருகின்றன.
புளோரிடாவில் தொடங்கி, வாஷிங்டன், நியூயார்க் என ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா பரவி வருவதால் அமெரிக்கர்கள்இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 46 பேர் இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த பாக்டீரியாக்களின் ஸ்போர்களை (கருக்கள்) உயிரியல் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்க,ரஷ்ய ராணுவங்கள் தான் மிக பாதுகாப்பாக வைத்துள்ளன. ஆனாலும் இந்த ஸ்போர்கள் சீனாவிடமும் மற்ற ஆசியநாடுகளிடமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பின் லேடன் கும்பல் செயலா?
பின்லேடன் கும்பலிடமும் இவை இருக்கலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. ஆந்த்ராக்ஸ் பரவலுக்கும்தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்று இன்னும் அறிந்து கொள்ள முடியாமல் அமெரிக்கா திணறிவருகிறது. இந் நிலையில் இந்நோய் பல நகர்களுக்கும் பரவுவதால் அமெரிக்கர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
அமெரிக்கா டூ கென்யா:
இப்போது கென்யாவிலும் ஆந்த்ராக்ஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நைரோபியில் வசித்துவரும் கென்ய குடும்பத்துக்கு அமெரிக்காவிலிருந்து வந்த கடிதம் முலமாக ஆந்த்ராக்ஸ் பரவியுள்ளது.
இக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆந்த்ராக்ஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இவர்களுக்கு அமெரிக்காவில்இருந்து ஒரு கடிதம் வந்தது. இந்தக் கடிதம் கடந்த மாதம் 8ம் தேதி (நியூயார்க் விமானத் தாக்குதலுக்கு 3நாட்களுக்கு முன்) அமெரிக்காவில் போஸ்ட் செய்யப்பட்டது.
இக் கடிதம் ஒரு மாதம் கழித்து கடந்த வாரம் இந்தக் குடும்பத்தினருக்கு வந்து சேர்ந்தது.
அதே போல கென்யாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு இரு கடிதங்கள் வந்தன. இவை பாகிஸ்தானில் இருந்துஅனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்களில் வெள்ளை நிறத் தூள் இருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித்தொடர்பாளர் டோர் பிரேவிக் கூறினார்.
இந்தத் தூள் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில்...
இந் நிலையில் இந்தியாவிலும் ஆந்த்ராக்ஸ் தாக்குதல் ஆரம்பாகியுள்ளது. ஆனால், இதுவரை ஆடு மாடுகள்மட்டுமே இதில் உயிரிழந்துள்ளன. கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்திலும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திலும்,மேற்கு வங்காளத்திலும் இந்த நோய் ஆடு மாடுகளைத் தாக்கியுள்ளது.
இந்த பாக்டீரியாவுக்கு எதிராக பென்சிலின் மருந்து உதவும் என்றாலும் சிப்ரோபிளாக்சின் தான் சிறந்த மருந்தாகக்கருதப்படுகிறது. இந்த மருந்தைத் தயாரிக்கும் கல்கத்தாவைச் சேர்ந்த மார்பென் லேபாரடரீஸ் தனது தயாரிப்பைஇரு மடங்காக உயர்த்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது தொழிற்சாலையில் முதலி 10 முதல் 15 டன் மருந்து தயாரித்து வந்த இந்நிறுவனம் இப்போது 25 டன் அளவுக்கு உற்பத்தியை கூட்டியுள்ளது. உலகம் முழுவதும் இருந்தும் இந்த மருந்துக்குஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நோய்த் தாக்குதலுக்கு வெபிேளாக்சின் என்ற புதிய அதிக வீரியம் மிக்க மருந்தையும் இந் நிறுவனம்தயாரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications