ஏர்வாடி மன நலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை... பார்வையிட்டார் நீதிபதி
சென்னை:
ஏர்வாடி மன நல காப்பகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் மன நலம் குன்றிய நோயாளிகளை நீதிபதி ராமதாஸ் சென்று பார்வையிட்டார்.
ஏர்வாடியில் தனியார் மன நல காப்பகத்தில் மன நலம் குன்றிய பலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு ஏற்பட்ட தீவிபத்தில் மன நலம் குன்றிய 25 பேர் உடல் கருகி இறந்து போனார்கள்.
இதையடுத்து ஏர்வாடியில் செயல்பட்டு வந்த தனியார் மன நல காப்பகங்களை மூடுமாறு தமிழக அரசுஉத்தரவிட்டது. அங்கு இருந்த பலரும் தமிழகத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் மன நலம் பாதிக்கப்பட்ட பல பெண்களும், ஆண்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மன நல காப்பகங்களின் செயல்பாடு குறித்தும், மன நோயாளிகளின் நிலை குறித்தும் ஆராய்வதற்காக நீதிபதி என்.ராமதாஸ்தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கமிஷனின் தலைவர் நீதிபதி ராமதாஸ்இன்று (வியாழக்கிழமை) கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று ஏர்வாடியிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டமன நோயாளிகளுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளதுஎன்பதை நீதிபதி ராமதாஸ் நேரில் சென்று பார்த்தார்.
அவர் மருத்துவர்களிடமும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்துஅறிந்தார்.
நீதபதி ராமதாஸ் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையை மேற்பார்வையிட்ட போது மன நல மருத்துவர்சிவசிதம்பரமும் உடனிருந்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications