தினபூமி அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்: 2 நிருபர்கள் படுகாயம்
மதுரை:
மதுரையில் தினபூமி பத்திரிக்கை அலுவலகததை ரவுடிக் கும்பல் பயங்கரமாகத் தாக்கியது. இதில் 2 நிருபர்கள்படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலை தினபூமி அலுவலகத்தில் இத் தாக்குதல் நடந்தது. 6 கார்களில் வந்த பெரிய கும்பல் கேட்டைஉடைத்துக் கொண்டு தினபூமி அலுவலகத்துக்குள் நுழைந்தது. அவர்களைத் தடுக்க முயன்ற காவலருக்கும் அடிவிழுந்தது.
நேராக எடிட்டோரியல் (செய்தி ஆசிரியர்கள் அறை) அறைக்குள் நுழைந்த அந்தக் கும்பல் பணியில்ஈடுபட்டிருந்த உதவி ஆசிரியர்களையும் நிருபர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது.
இதில் நிருபர்களான பன்னீர்செல்வம், சுந்தரபாண்டியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களிடம் இருந்துதப்ப முயன்ற பத்திரிக்கை ஆசிரியர் திருநாவுக்கரசு மற்றும் 2 உதவி ஆசிரியர்களையும் அக் கும்பல் விரட்டிவிரட்டி தாக்கியது.
பின்னர் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், கேமராக்கள், நாற்காலிகள், தொலைபேசிகள் ஆகியவற்றை அக்கும்பல் உடைத்து நொறுக்கியது.
இத் தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை.
ஆனால், இத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் நடத்தியிருக்க வேண்டும் என போலீசார்சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் இப் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவைமார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
அதிமுக-மார்க்சிஸ்ட் இடையே கூட்டணி ஏதும் இல்லை. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இந்நிலையில் தினபூமியில் வெளியான இச் செய்தி வாக்காளர்கள் இடையே குழப்பத்தை உருவாக்கிவிட்டதாகமார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.
இதையடுத்து அக் கட்சியினர் தான் தினபூமி மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.
ஆனால், பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications