சட்டம்-ஒழுங்கு விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை வரும்
பெரியகுளம்:
உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறையில் பெரியகுளம், வேலூர்,திருச்செங்கோடு ஆகிய இடங்களில் வன்முறைக் கும்பல் வாக்குப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓட்டம்பிடித்தததால் இங்குள்ள வாக்குச் சாவடிகளில் மூன்றில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப்போட்டியிடும் சண்முகம், சின்னப்பன் ஆகிய 2 பேரின் ஆதரவாளர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து சுமார் 750 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் 10 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டைகளுடன்வாக்குச் சாவடிக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 3 வாக்குப் பெட்டிகளில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு ஓட்டம்பிடித்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற முன்னாள் ராணுவவீரர் முரளிதரன் அரிவாளால் வெட்டப்பட்டதில்காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து பெரியகுளம் உதவிக் கலெக்டர் விஜயகுமார், வாக்குச் சாவடிக்கு வந்து மறு வாக்குப் பதிவுநடத்த உத்தரவிட்டார்.
இதே போல வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்வனம் கிராமத்தில் ஒரு கும்பல்வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்குப்பெட்டியைத் தூக்கிச் சென்றது. மேலும் 2 வாக்குப் பெட்டிகள்சேதப்படுத்தப்பட்டன.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்டக் கலெக்டர் மோகன்தாஸ் அங்கு விரைந்து சென்று, அந்தவாக்குச் சாவடிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டை ஊராட்சித் தலைவர் பதவிக்கு அழகுமணி ஆனந்தன்,பத்மினி கனகராஜ், பூங்கொடி சரவணன் ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள 123 வது வாக்குச் சாவடியில் காலை 11.30 மணியளவில் ஒரு மர்ம கும்பல் உள்ளே நுழைந்துவாக்குச்சீட்டுக்களைக் கிழிந்து எறிந்தனர். பிறகு வாக்குப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதைப்பார்த்த காவலர்கள் சுதாரித்துக் கொண்டு ஓடியவர்களைத் துரத்திப்பிடித்து வாக்குப் பெட்டியைக்கைப்பற்றினர். ஆனால் அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதையடுத்து இந்த 3 வாக்குச்சாவடிகளிலும் மறுதேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்ணாமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்வேட்மபாளர் ராஜாமணி தனது ஆதரவாளர்கள் 300 பேருடன் வாக்குச் சாவடிக்குள் நுழைந்தார்.
பிறகு அங்கிருந்த தேர்தல் அதிகாரியிடம் இருந்து வாக்குச் சீட்டுக்களை வாங்கிக் கிழித்துவிட்டு, 3வாக்குப்பெட்டிகளைத் தூக்கி அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டனர்.
இதையடுத்து கண்ணாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து ராஜாமணியைக்கைதுசெய்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications