டான்சி வழக்கு: அரசு தரப்பு வாதம் தொடங்கியது
சென்னை:
டான்சி வழக்கில் அரசுத்தரப்பில் வக்கீல் வெங்கடபதி கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.
டான்சி நில ஊழல் வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா, சசிகலாமற்றும் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 10 நாட்களாக நீதிபதி தினகர் முன்னிலையில் நடந்து வந்தது. அப்பீல்செய்தவர்கள் தரப்பு வாதம் முடிந்து விட்டது.
நேற்று (புதன்கிழமை) முதல் அரசு தரப்பு வாதம் ஆரம்பித்தது. அரசுத்தரப்பில் வக்கீல் வெங்கடபதி கோர்ட்டில்ஆஜராகி வாதத்தைத் தொடங்கினார். அதன் விவரம் வருமாறு,
அரசு வக்கீல்: கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள டான்சி நிலம், அடையார் சார் பதிவாளர் சரகத்தில் உள்ளது. இந்தநிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
நீதிபதி: இதே பகுதியில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை பெடரேஷன் நிறுவனம் டான்சி நிலத்தை, கிரவுண்டு விலைரூ.3 லட்சம் வீதத்தில் வாங்கியுள்ளது. இந்த விலை நிர்ணயம் அடையார் சார் பதிவாளரால் செய்யப்பட்டதா?.
அரசு வக்கீல்: த.கூ.ச.பெ.நிறுவனம் அரசுக்குச் சொந்தமானது. டான்சி நிலம் அந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதேதவிர விற்கப்படவில்லை.
நீதிபதி: இந்தக் கூட்டுறவு நிறுவனம் அரசுத்துறையின் கீழ் வருகிறதா?.
அரசு வக்கீல்: இந்த நிறுவனத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிதான் தனி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இதுஅரசுக்கட்டுப்பாட்டில் தான் வருகிறது.
நீதிபதி: நான் கேட்டது இந்த நிறுவனம் அரசுக்குச் சொந்தமானதுதானா? இல்லையா?
அரசு வக்கீல்: அதற்கான ஆவணங்களை ஆராய்ந்து கூறுகிறேன்.
நீதிபதி: கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள 105-வது சர்வே எண் கொண்ட நிலம் எப்படி வழிகாட்டு மதிப்பீடுசெய்யப்பட்டது. சென்னை நகரின் நிலமதிப்பிலா? அல்லது காஞ்சிபுரம் மாவட்ட நில மதிப்பிலா?
அரசு வக்கீல்: கிண்டி தொழிற்பேட்டியில் உள்ள நிலங்கள் சில அடையார் பகுதியிலும், மற்றவை ஆலந்தூர்பகுதியிலும் வருகின்றன.
நீதிபதி: நீங்கள் முரண்பாடாக விவாதம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.
அரசு வக்கீல்: ஜெயலலிதா வாங்கிய நிலம் அடையார் கிராமத்தில்தான் உள்ளது. இந்த நிலத்தின் விலை அதிகமதிப்புடையது. டான்சி நிறுவன முன்னாள் இயக்குநர் சீனிவாசனிடம் விசாரணை செய்தபோது சந்தை விலையும்,வழிகாட்டு மதிப்பீடும் ஒன்றுதான் என்று கூறியுள்ளார். ஆனால் வழிகாட்டுதல் மதிப்பை விட குறைவான விலைக்குடான்சி நிலம் விற்கப்பட்டுள்ளது.
நீதிபதி: அரசுத்தரப்பிட்ல கூறப்படும் அனைத்துக் கருத்துக்களையும் நிருபிக்க வேண்டும். இந்த வழக்கில் தாக்கல்செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் நகல்களாகவே உள்ளன.
அரசு வக்கீல்: தனிக் கோட்டில் நகல் ஆவணங்களுடன் அசல் ஆவணங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டன.
நீதிபதி: இந்தக் கோர்டிலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டாமா?. கிரவுண்டு விலை ரூ.7 லட்சம் என்றுசப்ரெஜிஸ்ட்ரார் எப்படி நிர்ணயித்தார்?.
அரசு வக்கீல்: அவர் எப்படி என்று சொல்லவில்லை.
நீதிபதி: அப்படி என்றால் தனி நபர் எடுத்த முடிவா?
அரசு வக்கீல்: சந்தை விலையும், வழிகாட்டுதல் மதிப்பீடும் ஒன்றுதான்.
நீதிபதி: இதுதொடர்பாக நீங்கள் குழப்பமான நிலையில் இருக்கிறீர்கள் என்பதை வேதனையுடன்தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கு வழிகாட்டுதல் மதிப்பீடு பெண்டுலம் மாதிரி ஆடுகிறது. தனிக் கோர்ட்டு இந்த வழக்கை தவறான பாதையில்எடுத்துச் சென்றுள்ளது. மேலும் தனிக்கோர்ட் நீதிபதி எதை வைத்து விலை குறைவு என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.
வழிகாட்டு விலையை பின்பற்றிய அவர் எப்படி சந்தை விலையை திடீர் என்று எடுத்துக்கொண்டுள்ளார்? அப்படிஇருக்க சந்தை விலையும், வழிகாட்டுதல் மதிப்பும் எப்படி ஒன்றுதான் என்கிறீர்கள்?
இவ்வாறு நேற்று வாதம் நடந்தது. இன்றும் தொடர்ந்து விவாதம் நடக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications