தஞ்சை அருகே லாரி மோதி பெண் வேட்பாளர் பலி
அம்மாப்பேட்டை:
தஞ்சை அம்மாப்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண் வேட்பாளரும் அவரது கணவரும் லாரி விபத்தில்உயிரிழந்தனர்.
அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றிய நீலப்புலிகள் இயக்க அமைப்பாளர் திருக்கருக்காவூர் பூபதி. இவரது மனைவிசின்னாச்சி. சின்னாச்சி அதிமுக ஆதரவுடன் திருக்கருக்காவூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடமனுதாக்கல் செய்திருந்தார்.
இன்று(வியாழக்கிழமை) இந்தப் பகுதில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் சின்னாச்சியும், அவரது கணவர்பூபதியும் அம்மாப்பேட்டைக்குச் சென் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அடையாள அட்டைகள்பெற்றுக்கொண்டு மொபட்டில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது காரைக்காலிலிருந்து நாமக்கல்லுக் கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்றுகொண்டு எதிரே வேகமாகவந்துகொண்டிருந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் ரத்தவெள்ளத்தில் அதேஇடத்தில் பலியானார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்தததும் பாபநாசம் டி.எஸ்.பி.ராஜேந்திரன் தலைமையில், அம்மாபேட்டை போலீசார்வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
நாமக்கல் அதிமுக வேட்பாளர் மரணம்: தேர்தல் தள்ளிவைப்பு
நாமக்கல் நகராட்சித் தேர்தலில் வார்டு உறுப்பிணர் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த வார்டுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நராட்சிக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டுஉறுப்பிணர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சீனிவாசன் மகன் சுகுமார்.
இவர் கடந்த 1 மாதமாக தான் போட்டியிடும் பகுதியில் மக்களைச் சந்தித்து இரட்டை இலைச் சின்னத்திற்குவாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்துவந்தார்.
இந்நிலையில் சுகுமார் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றுவிட்டு வீட்டில் வந்துபேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அப்போது சுகுமார் திடீரென மயங்கிவிழுந்துவிட்டார்.
உடனே அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் சிகிச்சைக்காகஎடுத்துச்சென்றனர்.
அங்கு அவரகுக்கு ரத்தகொதிப்பு அதிகமாகி மூளை நரம்பு வெடித்திருப்பதால், மேல் சிகிச்சைக்காக கோவைமருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.
இதையடுத்து சுகுமாரை காரில் கோவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயேஅவருடைய உயிர் பிரிந்துவிட்டது.
இதையடுத்து நாமக்கல் நகராட்சியில் உள்ள 12-வது வார்டுக்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications