போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் புதிய சமரச திட்டம்
குவெட்டா:
ரகசியமாக ஆப்கானிஸ்தான் சென்று முல்லா ஒமரைச் சந்தித்துவிட்டு இன்று பாகிஸ்தான் திரும்பிய தலிபான் தூதர்புதிய போர் நிறுத்தத் திட்டத்துடன் வந்துள்ளார்.
கடந்த 13 நாட்களாக ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதில் ஆப்கானில் உள்ள முக்கியநகரங்களான காபூல், காண்டகார் மற்ம் ஜாலாலாபாத் உள்ளிட்ட நகரங்கள் குண்டுவீச்சில் பலத்த சேதம்அடைந்துள்ளன. ஏராளமான தலிபான் படைவீரர்களும், பொதுமக்களும் நாள்தோறும் கொல்லப்பட்டுவருகின்றனர்.
ஆனால் சர்வதேச பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க தலிபான்கள் மறுத்து வருகின்றனர்.மேலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவிரும்புவதாக அவர்கள் அறிவித்தனர்.
பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை, வேண்டுமானால் பின்லேடனை ஒப்படைக்க 2-வது வாய்ப்புத்தருகிறோம் என்று அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கும் தலிபான்கள் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதால் அமெரிக்கா போரை நிறுத்தவில்லை.
மேலும் தற்போது தரைப்படைத் தாக்குதலையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதனால் பல வழிகளிலும்தலிபான்கள் தாக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்துல் சலாம் இஸ்லாமாபாத்திலிருந்து, காண்டகார் சென்று அங்கு மறைவான இடத்தில் வாழ்ந்துவரும் தலிபான் தலைவர் முல்லா ஒமரைச் சந்த்தித்துவிட்டு பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார். இதுகுறித்து இன்றுகுவெட்டாவில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நான் சில நாட்களுக்கு முன் காண்டகார் சென்று எங்கள் தலைவர் முல்லா ஒமரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன்.
நான் தற்போது போர் நிறுத்தம் செய்யும் திட்டத்துடன் வந்துள்ளேன். மேலும் இதுகுறித்து பாகிஸ்தான் அரசுடன்பேசுவதற்காக இப்போது இஸலாமாபாத் சென்று கொண்டிருக்கிறேன்.
விரைவில் நான் காண்டகார் சென்றதற்கான காரணத்தையும், போர் நிறுத்தம் பற்றிய முழுதிட்டத்தையும்பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பேன். மேலும் அமெரிக்காவில் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் பரப்பப்படுவதற்கும்எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் தலிபான் வெளியுறவு அமைச்சர் வகில் அகமது முட்டாவகில், பின்லேடனை ஒப்படைப்பது குறித்துபாகிஸ்தான் அரசுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் முட்டாவகிலுக்கும் தலிபான் தலைவர் முல்லா ஒமருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில்அவர் மிதவாத தலிபான் பிரிவு என்று புதிய அமைப்பை ஏற்படுத்தப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications