2வது கட்ட தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை:
தமிழகத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது உள்ளாட்சித் தேர்தலின்போது 66 சதவீத வாக்குகள் பதிவாகின.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் கள்ள ஓட்டுக்கள் சரமாரியாக போடப்பட்டதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு,முதல் கட்டத் தேர்தலைப் போலவே வன்முறையுடன்முடிந்திருக்கிறது.
நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில்தான் அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. சராசரியாக 66சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆலந்தூர் நகராட்சிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பெருமளவில் வன்முறை நடந்ததால் 19வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடக்கும் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன்தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் நகராட்சித் தேர்தலில், இரண்டு வேட்பாளர்களின் சின்னங்கள் மாறியிருந்தன. ஆனால் சிலவாக்காளர்கள் வாக்களித்துச் சென்ற பிறகே இந்த தவறு கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வேறு வாக்குச் சீட்டுக்கள் வரவழைக்கப்பட்டன. இந்தக் குழப்பம் காரணமாக இரவு 9 மணி வரைஅந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.
மற்றொரு வாக்குச் சாவடியில் ஒரு வாக்காளர் வாக்களிக்க வந்தபோது, அவர் கள்ள ஓட்டுப் போட வந்துள்ளதாகஒரு வேட்பாளர் புகார் கூறினார். இதையடுத்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், வாக்களிக்க வந்த முருகன் என்ற அந்த வாக்காளர் ஓட்டுப் பெட்டியைக் கீழே தள்ளி விட்டுவிட்டுஅங்கிருந்து சென்றார். இதையடுத்து ஒரு கும்பல் வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றது. இதனால் சுமார் 10நிமிடத்திற்கு வாக்கு சாவடி மூடப்பட்டது.


Click it and Unblock the Notifications
