குடியாத்தத்தில் ஒரு ஓட்டின் விலை ரூ.500
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே ஒரு ஓட்டுக்கு ரூ.500 வழங்கப்பட்டதாம். இப்பகுதிகளில் குறைந்த பட்சம் ரூ.25 வரை ஒருஓட்டுக்கு கொடுக்கப்பட்டது.
தேர்தல் என்றாலே பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது என்பது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.
வசதியான வேட்பாளர்கள் தங்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக தாராளமாக பொருள்களையும் பணத்தையும்மக்களுக்கு வாரி வழங்குவர்.
இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் குடியாத்தம் அருகே சேம்பள்ளியைச் சேர்ந்த சில வசதியான வேட்பாளர்கள்காமாட்சியம்மன் விளக்கு, புடவை, ஜாக்கெட், பணம் என்று மக்களுக்கு வாரி வழங்கிவிட்டனர்.
இதெல்லாம் போக ஒரு ஓட்டுக்கு ரூ.500 வழங்கப்பட்டதாம். வாக்காளர்களின் மதியச் சாப்பாட்டுக்காக பிரியாணிப்பொட்டலங்களையும் வேட்பாளர்கள் விநியோகித்துள்ளனர்.
ஒரு சில பகுதிகளில் வேட்பாளர்கள் கொடுத்த பொருட்களையும் பணத்தையும் வாக்காளர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில இடங்களில், இவ்வாறு பொருட்கள் கொடுக்க வந்த வேட்பாளர்களை பெண்கள் விரட்டியத்தனர்.












Click it and Unblock the Notifications