புதுவையின் புதிய முதல்வரானார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியின் புதிய முதல்வராக என். ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பதவியிலிருந்த விலகியுள்ள சண்முகத்தின் அமைச்சரவையில் இருந்தவர் ரங்கசாமி. பொதுப்பணித் துறை,பொது நலத் துறை, குடிநீர் வழங்கும் துறை, விவசாயத் துறை, வனத் துறை போன்ற துறைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார் இவர்.
தத்தான் சாவடி எம்.எல்.ஏவான ரங்கசாமியையே தற்போது பாண்டிச்சேரியின் புதிய முதல்வராக காங்கிரஸ்எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
பாண்டிச்சேரியிலுள்ள ஆனந்தா-இன் ஓட்டலில் இன்று காலை நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்இம்முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை பாண்டிச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்.












Click it and Unblock the Notifications