தலிபான் எதிர்ப்பு கூட்டணியில் பிளவு: அமெரிக்கா சதி
காபூல்:
பாகிஸ்தான் நெருக்குதலுக்குப் பணிந்து நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளுக்கு இடையே பிளவை உருவாக்கஅமெரிக்கா முயன்று வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தலிபான்களை எதிர்த்து பல ஆண்டுகளாக இந்தப் படையினர் போரிட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் வடபகுதி இவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
ஆனால், இவர்கள் தலிபான்களோடு சேர்த்து பாகிஸ்தானையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இவர்களுக்குஎதிராகப் போராட தலிபான்களுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. ஆயுதங்களை வழங்கி வருகிறது.
தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தவுடன் இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.தலிபான்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வந்தனர்.
தலிபான்களுக்கு எதிராக ரகசிய தகவல்களைப பெற இவர்களின் உதவியையும் அமெரிக்கா கோரியிருந்தது.இவர்களும் அமெரிக்காவுக்கு உதவினர்.
ஆனால், தலிபான்கள் மீதான தாக்குதலில் இந்தப் படையினரை அமெரிக்கா மெதுவாக ஒதுக்க ஆரம்பித்துவிட்டது.இதற்கு பாகிஸ்தான் தான காரணம் என்று தெரிகிறது.
இப்போது இவர்களை ஒதுக்கிவிட்டு தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் இன்னொரு குழுவுடன் அமெரிக்காகைகோர்த்துள்ளது. உஸ்பெகிஸ்தானின் ஆதரவு பெற்ற அப்துல் ரஷீத் தோஸ்தமின் படையினர்ஆப்கானிஸ்தானின் வட-மேற்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இவர்கள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் அவ்வப்போது சேர்ந்து கெள்வதுண்டு. ஆனால், பெரும்பாலுமதனித்தே போர் நடத்தி வருகின்றனர்.
இப்போது இவர்களுடன் அமெரிக்கா கைகோர்த்துக் கொண்டு நார்த்தன் அலையன்ஸ் படையினரை ஒதுக்கஆரம்பித்துள்ளது.
8 பேர் கொண்ட அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குழு திடீரென வடக்கு மேற்கில் உள்ள அப்துல் ரஷீத்தோஸ்தமின் பகுதிக்குள் வந்திறங்கியுள்ளது. நார்த்தர்ன அலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதிக்கு அருகேநுழைவதைக் கூட இந்தப் படையினரிடம் அமெரிக்கர்கள் தெரிவிக்கிவில்லை.
இதையடுத்து அமெரிக்கா மீது நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் எரிச்சலடைந்துள்ளனர். தலிபான்களைஎதிர்த்துப் போராடி வரும் தங்களை அமெரிக்கா ஒதுக்கிவிட்டு மூன்றாவது படையை ஆதரிக்க ஆரம்பித்துள்ளதுஇந்தப் படையினருக்கு கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
நார்த்தன் அலையன்ஸ் படையின் கமாண்டர் முகம்மத் அட்டா கூறுகையில், அமெரிக்கப் படையினர் சமான்கன்பகுதியில் உள்ள தாரா-ஏ-செளப் பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் வந்திறங்கியுள்ளன. அவர்கள் அப்துல் ரஷீத்தோஸ்தமுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
நாட்டின் வட பகுதியில் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்துள்ள அமெரிக்கர்கள் இது குறித்துஎங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. தாங்கள் வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையால்அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானியிடமோ அல்லது எங்கள் படைத் தளபதிமுகம்மத் பகீமிடமோ அமெரிக்கர்கள் ஏன் பேசவில்லை?
அமெரிக்கர்களின் இச் செயல் தலிபான் எதிர் படையினர் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும். இதைத்தான் அமெரிக்கா விரும்புவதாகவும் தெரிகிறது.
தலிபானுக்கு எதிரான படைகளை பாகிஸ்தானின் நெருக்குதலால் பிரிக்க அமெரிக்கா முயல்கிறது என்றார்.
பிரித்தாலும் சூழ்ச்சி:
அப்துல் ரஷீத் தோஸ்தம் கொல்லப்பட்டுவிட்டதாக தலிபான்கள் கூறியதாக அல்-ஜசீரா டிவியில் வெளியானசெய்தியையும் முகம்மத் அட்டா மறுத்தார். சிறிது நேரத்திற்கு முன் தான் தோஸ்தமுடன் பேசியதாகவும், அவர்நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தோஸ்தம்-நார்த்தர்ன் அலையன்ஸ் இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் மேலும் சிலபடைத் தலைவர்களும் இணைந்து யுனைட்டட் பிரண்ட் என்ற அமைப்பை உருவாக்கி தலிபான்களை எதிர்த்துப்போராடி வருகின்றனர். இந்த யுனைட்டட் பிரண்டுக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் தான் தலைமை தாங்குகிறது.
ஆனால், இப்போது நார்த்தர்ன் அலையன்ஸை ஒதுக்கிவிட்டு நேரடியாக தோஸ்தமுடன் அமெரிக்கா கைகோர்க்கமுயல்வது பிரித்தாளும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் பாகிஸ்தானின் நெருக்குதல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications