அதிமுக மீது தேர்தல் கமிஷனிடம் திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரியின் கையெழுத்து இல்லாத வாக்குச் சீட்டுக் கட்டுகளை நிராகரிக்கவேண்டும் என தேர்தல் கமிஷனிடம் திமுக கோரியுள்ளது.
இது தொடர்பான கோரிக்கை மனுவை திமுக தைலமைக் கழகச் செயலாளர் மிசா கணேசன் மாநிலத் தேர்தல்ஆணையரிடம் கொடுத்தார். இவர் தான் சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்ட ஸ்டாலினின் பூத் ஏஜெண்ட்என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மனுவில் திமுக கூறியிருப்பதாவது:
கடந்த 16,18ம் தேதிகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் முழு அளவில் வன்முறைகளும், கள்ளஓட்டு போடுவதும் நடந்தது. அதிமுகவினர் வன்முறையைத் தூண்டிவிட்டனர்.
கிட்டத்தட்ட 353 வாக்குச் சாவடிகள் அதிமுகவினரால் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications