For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

அமெரிக்க ஹெலிகாப்டர் பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக செயல்பட்டு வந்த இந்த வீரர்கள் சென்றஹெலிகாப்டர் நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளானது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் விமானப் படைத் தளத்தின் அருகே இந்த விபத்து நடந்தது.

இத் தகவலை பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் விபத்துக்கான காரணம், மரணமடைந்த வீரர்களின் பெயர்கள் ஆகியவிவரங்களை வெளியிட பென்டகன் மறுத்துவிட்டது

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X