மதுரை அருகே சாலை விபத்து- 3 பேர் பலி, 5 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே கல்லுப்பட்டியில் ஆட்டோ மீது பஸ் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர்படுகாயமடைந்தனர்.

மதுரையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் மதுரை திருமங்கலம் சாலையில் உள்ளது கல்லுப்பட்டி என்ற கிராமம்.

இங்கு இன்று காலை ஒரு ஆட்டோவில் அதன் டிரைவர் உட்பட 8 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அந்த ரோட்டில் எதிரே வேகமாக வந்துகொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று எதிதர்பாராதவிதமாக ஆட்டோவில் மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள்.

மேலும் 5 பேர் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தற்போது மதுரை அரசுராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர் விவரம் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்துதகவல் அறிந்தததும் திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் டிரைவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+