மர்மப் பார்சல்.. திருப்பதி லட்டு.. ஆந்த்ராக்ஸ் பீதி..
சென்னை:
சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கு மர்ம பார்சலில் திருப்பதி லட்டு வந்ததை அடுத்து அதுஆந்த்ராக்ஸ் பார்சலாக இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது.
சென்னை மயிலாப்பூர் சாந்தி அபார்ட்மெண்டில் வசித்துவருபவர் சேகர் என்ற தொழில் அதிபர்.
இவருக்கு கொரியர் சர்வீசில் ஒரு பார்சல் வந்தது. அதைப் பெற்றுக்கொண்ட சேகர் கவரைத் திருப்பிப் பார்த்ததில்அனுப்பியவரின் முகவரி இல்லாததைக் கண்டு சந்தேகப்பட்டார்.
பிறகு அதை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பிரிக்கலாமா என்று ஆலோசனை கேட்டார்.அவர்களோ அட்ரஸ் இல்லாமல் வந்தால் அது ஆந்த்ராக்ஸ்தான் என்று அடித்துக் கூறிவே, அதிர்ந்து விட்டார் சேகர்.
பிறகு ஒரு முடிவுக்கு வந்து அந்தப் பார்சலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அதை வாங்கி ஒரு கூடையில் போட்டு மூடிவைத்துவிட்டு, சென்னை இணைக் கமிஷ்னர்சைலேந்திரபாபுவுக்கு தகவல் கொடுத்தனர்.
அவரும் விரைந்து வந்து அனைத்துப் போலீசாரையும் மூக்கை மறைத்துத் துணியைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்.இதுகுறித்துத் தகவல் அறிந்து நிருபர்களும் கூடிவிட்டனர்.
பிறகு ஒரு கத்தரியால் சைலேந்திரபாபு அந்தப் பார்சலின் மேல்கவரைக் கத்தரித்தார். உள்ளே பார்த்தால் பாலிதீன்கவருக்குள் உருண்டையான ஒரு பொருள் இருந்தது. பிறகு அதையும் பிரித்துப் பார்த்தததில் அதற்குள், ஒருலட்டும், வடை, முருக்கு போன்ற திருப்பதி கோயில் பிரசாதம் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அதிலிருந்த கடிததைப் பிரித்துப் பார்த்ததில் அதில், சேகரின் பெங்களூர் நண்பர் குருராஜ் திருப்பதிசென்றதாகவும், அப்போது வாங்கிய பிரசாதத்தை அனுப்பியிருப்பதாகவும் எதியிருந்தார்.
இதைப் பார்த்ததும் சேகர், போலீஸ் அதிகாரிகள் உட்பட அங்கிருந்த அனைவரும் பெருமூச்சு விட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications