சத்துணவில் விஷம்: 450 குழந்தைகள் மயக்கம்
அரியலூர்:
அரியலூர் அருகே விஷமான உணவை உண்டதால் 450 பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே உள்ள காட்டுப் பதியம் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் 450குழந்தைகள் படிக்கிறார்கள்.
இவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் வழக்கம் போல பள்ளியில் சமைத்த மதிய உணவை உண்டார்கள்.சிறிது நேரத்தில் அனைத்துக் குழந்தைகளும் வாந்தி எடுத்ததோடு மயங்கி விழ ஆரம்பித்தனர்.
இதையறிந்த அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தகவல் கொடுத்ததோடு,குழந்தைகளை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள்.
மருந்து இல்லை:
ஆனால் அந்த மருத்துவமனையில் போதிய மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் இல்லை என்று கூறி குழந்தைகளைஅனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் பெற்றோர்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்தார்கள். பிறகு உயிருக்குப் போராடும் தங்கள்குழந்தைகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர்-பெரம்பலூர்சாலையில் சாலை மறியலில்ஈடுபட்டார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் வட்டாச்சியர் மற்றும் கோட்டாச்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்குவிரைந்துவந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களைச் சமாதானப்படுத்தி, குழந்தைகளை மருத்துவமனையில்அனுமதிக்க வைத்தனர்.












Click it and Unblock the Notifications