வாக்கு எண்ணும் பணி துவங்கியது
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமைகாலை 8 மணிக்குத் துவங்கியது.
கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்நடந்தது. இதுதவிர பல்வேறு புகார்கள் காரணமாக மேலும் இரண்டு நாட்கள் மறுவாக்குப் பதிவு நடந்து முடிந்தது.
இந்த நிலையில் வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத்துவங்கியது. சென்னையில் 11 இடங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் 940இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணும் போது புதிய முறை கையாளப்படுகிறது. வார்டு வாரியாகஎண்ணாமல், வாக்குச் சாவடி வாரியாக ஓட்டுக்கள் எண்ணப்படவுள்ளன. இதன் மூலம்கள்ளஓட்டுக்களைக் கண்டுபிடிக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கள்ள ஓட்டுக்களை தவிர்க்கும் பொருட்டு மூன்று முக்கியஉத்தரவுகளை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு தமிழகதேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிக அளவில் கள்ள ஓட்டுக்கள்போடப்பட்டதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக திமுக உள்ளிட்ட பல கட்சிகள்ஆளுநரிடம், தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்தன.
இந்த நிலையில், கள்ள ஓட்டுக்களை தவிர்க்கும் வகையில் சில உத்தரவுகளை தேர்தல்ஆணைய செயலாளர் தனவேல் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சரியான மடிப்பு இல்லாமல், திணிக்கப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டுகளைநிராகரித்து விட வேண்டும், கவுன்டர்பாயிலுடன் கூடிய வாக்குச் சீட்டுக்களையும்நிராகரித்து விட வேண்டும், வாக்குச் சீட்டில் அம்புக்குறியைத் தவிர வேறு எந்தமுத்திரைகள் பதிவாகி இருந்தாலும் அவற்றையும் நிராகரித்து விட வேண்டும் என்றுஉத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர வாக்குச் சாவடி தேர்தல் அதிகாரியின் கையெழுத்து இல்லாத ஓட்டுச்சீட்டுக்கள் கள்ள ஓட்டுக்களாக கருதி நிராகரிக்கப்படும்.
மேலும், வாக்குச் சாவடி வாரியாக ஓட்டுக்கள் எண்ணப்படுவதால் வார்டுதேர்தலுக்கான முடிவுகளை வாக்கு எண்ணும் மைய தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பர்.மேயர் தேர்தலுக்குரிய முடிவை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு அறிவிப்பார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications