5 நார்தர்ன் அல்லயன்ஸ் படையினரை தூக்கிலிட்ட தலிபான்கள்
காபூல்:
போர்களத்தில் கைது செய்யப்பட்ட நார்தர்ன் அல்லயன்ஸ் படையைச் சேர்ந்த 2 கமாண்டர்கள் மற்றும் 3 வீரர்களைதலிபான் படையினர் பொது இடங்களில் தூக்கிலிட்டனர்.
இதற்கிடையில் ஆப்கானின் வடக்குப் பகுதியை ஆளும் நார்தர்ன் அல்லயன்ஸ் படையினரும், தலிபான்கள் மீதுதாக்குதல் நடத்திவருகிறார்கள்.
இந்நிலையில் தலிபான்களின் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்த நார்தர்ன் அல்லயன்ஸ் படையைச் சேர்ந்த 5பேரை தலிபான்கள் கைது செய்து மஸார்-ஏ-ஷெரீப் நகரத்தில் உள்ள பொது இடங்களில் தூக்கிலிட்டுள்ளனர்.
இதுகுறித்து தலிபான்களின் பக்தார் செய்தி நிறுவனத்தின் தலைவர் அபுல் ஹனன் ஹேமத் கூறுகையில்,
நார்தர்ன் அல்லயன்ஸ் படையைச் சேர்ந்த 5 பேர் போர்க்களத்தில் கடுமையாகப் போரிட்டதுடன், தலிபான் ராணுவநடவடிக்கைகள் பற்றி வேவு பார்த்தனர். இவர்களில் 2 பேர் கமாண்டர்கள், மற்ற 3 பேரும் போர் வீரர்கள்.
இவர்கள் 5 பேரையும் தலிபான் படையினர் கைது செய்து மஸார்-ஏ-ஷெரீப் நகரத்தில் வெவ்வேறு பொதுஇடங்களில் தூக்கிலிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மஸார்-ஏ-ஷெரீப் நகரம் பால்க் மாகாணத்தின் தலைநகராக உள்ளது. கடந்த 1998லிருந்து இந்த மாகாணம்தலிபான்கள் ஆட்சியின் கீழ் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த நகரைக் கைப்பற்ற நார்தர்ன் அல்லயன்ஸ்படையினர் கடுமையாகப் போரிட்டு, ஓரளவு முன்னேற்றமும் அடைந்துவருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications