அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்து: 25 வீரர்கள் பலி?
காண்டஹார்:
அமெரிக்க ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் 20 முதல் 25 அமெரிக்க வீரர்கள் பலியாகிவிட்டதாகதலிபான் கூறியுள்ளது.
ஆனால், இந்த ஹெலிகாப்டர் காண்டஹார் மீது பறந்தபோது தங்களால் சுடப்பட்டு சேதமடைந்ததாகவும்உடனடியாக அது பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தரையில் விழுந்து நொறுங்கியதாவும் தலிபான் கல்வியமைச்சர்முல்லா அமிர் கான் முத்தாகி கூறியுள்ளார்.
இதில் மொத்தம் 20 முதல் 25 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் அதை அமெரிக்கா மறைப்பதாகவும்கூறினார்.
இந்தியப் பெருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள யு.எஸ்.எஸ். கிட்டி என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து இந்தஹெலிகாப்டர் ஆபகானுக்குள் பறந்து சென்றதாகக் கருதப்படுகிறது. ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது.இந்த ஹெலிகாப்டர் போர் நடவடிக்கையில் ஈடுபடவேயிலலை. அது பாகிஸ்தானில் இருந்து வீரர்களுக்கு உணவு,உடைகளைக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால் முத்தாகி கூறுகையில், மொத்தம் 5 ஹெலிகாப்டர்கள் காண்டஹாருக்குள் பறந்து வந்தன. ஒவ்வொருஹெலிகாப்டரிலும் 20 முதல் 25 அமெரிக்க வீரர்கள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர்கள் மீது தலிபான் வீரர்கள்விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்தது.உடனடியாக அது பாகிஸ்தானை நோக்கி பறந்து சென்றது.
ஆனால், தரையிறங்குவதற்கு முன்னதாகவே விழுந்து நொறுங்கிவிட்டது. இதில் அனைத்து வீரர்களும்பலியாகிவிட்டனர் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications