தேர்தலில் வன்முறை நடக்கவில்லையா?- கருணாநிதி கேள்வி
சென்னை:
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரிய அளவில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை என்றுதமிழக அரசு கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிப்பதாவது,
கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 53 பூத்களில் மட்டுமேமறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டது. அப்போது தமிழகத் தேர்தல் அதிகாரியாக இருந்தவரும் தற்போது அதிமுகஎம்.பியாக இருப்பவருமான மலைச்சாமி உள்ளாட்சித் தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்ததாக அறிவித்தார்.
ஆனால் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 500க்கும் மேற்பட்ட பூத்களில் மறுவாக்குப்பதிவுநடத்தப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் எதிர்கட்சி வேட்பாளர்களை ஆளுங்கட்சியினர் தாக்கியுள்ளனர்.எதிர்கட்சி எம்.எல்.ஏவைக் கூட விட்டுவைக்கவில்லை.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிமுக ஆட்சியில் வன்முறைக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதற்கு சிறந்த சான்றுகளாகஅமைகிறது.
நிலைமை இவ்வாறுஇருக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உள்ளாட்சித் தேர்தல் பெரிய அளவுவன்முறை எதுவுமின்றி அமைதியாக நடைபெற்றதாகக் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை! பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்











Click it and Unblock the Notifications