சென்னையில் டிவி நடிகையின் தாய் படுகொலை
சென்னை:
சென்னையில் ஆந்திராவைச் சேர்ந்த டிவி நடிகையின் தாயார் படுகொலை செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் அனந்தலட்சுமி (51). இவர் மாம்பலம் பகுதியில் அபார்ட்மென்டில் தங்கியிருந்தார்.இவருக்குக் கணவர் இல்லை. மகள் ஜோதியும், மருமகன் தேவானந்த்தும் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.
அனந்த லட்சுமி டிவி நாடகங்களில் நடித்து வந்தார். ஜோதியும் டிவி நாடக நடிகைதான். இவர் தெலுங்கு டிவிநாடகங்களில் நடித்து வந்தார். அடிக்கடி சென்னை வந்து தாயைப் பார்த்துச் செல்வார்.
அனந்தலட்சுமிக்கு பல சினிமாக்காரர்களின் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவரது வீட்டுக்கு பல சினிமாபிரபலங்கள் வந்து செல்வார்கள் என்றும், சில நேரங்களில் இரவில் தங்கியிருந்து விட்டுச் செல்வது உண்டு என்றும்பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் வழக்கம் போல பால்காரர் பால் பாக்கெட்டைப் போட்டு விட்டுச் சென்றுவிட்டார். ஆனால் விடிந்து வெகு நிேரமாகியும் அனந்த லட்சுமி பால் கவரை எடுக்காததால் சந்தேகம் அடைந்தபக்கத்து வீட்டினர் கதவைத் தட்டியுள்ளனர். கதவு திறந்து கொண்டுள்ளது. இதையடுத்து உள்ளே நுழைந்துபார்த்தனர். அப்போது சமையலறையில் அனந்தலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையிலானபோலீஸார் அங்கு விரைந்து வந்தனர். பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியபோது,வெள்ளிக்கிழமை இரவு ஒரு இளம் தம்பதி வந்து தங்கியதாகவும் அவர்களைத் தற்போது காணவில்லை என்றும்தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள்தான் அனந்தலட்சுமியைக் கொன்றிருக்க வேண்டும் என்று போலீஸார்கருதுகின்றனர்.
இதற்கிடையே, அனந்தலட்சுமியின் வீட்டில் நிகை, பணம் எதுவும் கொள்ளை போனதாகத் தெரியவில்லை. வீடும்அலங்கோலமாக இல்லாமல் சாதாரணமாகவே உள்ளது. எனவே கொலை செய்தவர்கள், அனந்தலட்சுமிக்கு மிகவும்நெருங்கியவர்களாக இருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
கொலை நடந்த வீட்டிலிருந்து உருட்டுக் கட்டை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அசோக் நகர் இன்ஸ்பெக்டர்பொம்மைச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications