புதுவை: ராமதாஸ் கனவை நனவாக்கிய கண்ணன்
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு வெறும் கனவாகவே இருந்து வந்ததை தனது சாதுரியஅரசியல் மூலம் நனவாக்கிக் காட்டியுள்ளார் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் தலைவர் கண்ணன்.
வன்னியர் ஒருவர் பாண்டிச்சேரி முதல்வராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்து வந்தார் டாக்டர் ராமதாஸ்.இதற்காக என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தார். ஆனால் எதுவும் பலிக்கவில்லை. கடந்தசட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கும் எண்ணத்துடன் தேர்தலில்போட்டியிட்டார். ஆனால் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ராமதாஸால் முடியாததை பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் தலைவர் கண்ணன் சாதித்துள்ளார்.வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ரங்கசாமி பாண்டிச்சேரி முதல்வர் பதவிக்கு வந்துள்ளதில் பெரும் பங்குகண்ணனுக்கு உள்ளது. அவரது பரிந்துரையின்பேரில்தான் ரங்கசாமிக்கு இந்த பதவி கிடைத்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து வந்த கண்ணன் திடீரென்று அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்கே பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது.
பாண்டிச்சேரி இளைஞர் சதாயத்திடையே மிகப் பெரும் சக்தியாக இருப்பவர் கண்ணன். அவர் கூறினால் அதைச்செய்து முடிக்கக் கூடிய இளைஞர் பட்டாளம் அவர் பின்னால் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு கண்ணன்ஆதரவு பலத்தையேக் கொடுக்கும் என்பதை உணர்ந்த காங்கிரஸ் உடனடியாக அவரது ஆதரவை ஏற்றுக்கொண்டது.
மேலும், கண்ணன் பரிந்துரைத்த ரங்கசாமியை முதல்வராக்கவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் நாராயணசாமி ஒத்துக்கொண்டார். நாராயணசாமியும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.
கண்ணனுக்கு நின்றிக் கடனாக பாண்டிச்சேரி மக்கள் கட்சியின் லட்சுமி நாராயணன் அமைச்சராக்கப்படுகிறார்.
தன்னால் முடியாவிட்டாலும் தனது சதாயத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்சேரி முதல்வராகியுள்ளது நிச்சயம் டாக்டர்ராமதாசுக்கு மகிழ்ச்சியையே தரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications