பின்லேடன் பெயரில் டிக்கெட் கேட்ட பிரிட்டிஷ் நிருபர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தான் பின்லேடன் இருக்கிறார் என்பதை நிருபிக்க, அவர் பெயரில் விமான டிக்கெட் வாங்க முயன்றபிரிட்டிஷ் பெண் பத்திரிக்கை நிருபர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது,

இங்கிலாந்தில் உள்ள சண்டே டெலிகிராப் என்ற பத்திரிக்கையில் நிருபராக இருப்பவர் கிறிஸ்டினா லேம்ப். இவர்தற்போது ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படை நடத்திவரும் தாக்குதல்கள் குறித்துச் செய்தி சேகரிப்பதற்காகபாகிஸ்தானில் இருக்கிறார்.

இவர் நேற்று குவெட்டா நகரத்திலிருந்து, இஸ்லாமாபாத்திற்குச் செல்ல விமான டிக்கெட் கேட்டார். அப்போதுதனது பெயர் ஒசாமா பின் லேடன் என்றும் கூறினார்.

சந்தேகமமைடந்த அதிகாரிகள் இவரைப் பிடித்து விசாரித்ததில் வேடிக்கைக்காக தாம் இவ்வாறு செய்ததாகக்கூறினார். மேலும் தன்னை மன்னித்துவிடுமாறும் கேட்டுள்ளார்.

ஆனால் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருக்கிறார் என்று அவர் நினைக்கிறார். அதை நிருபிப்பதற்காகவேஇவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

இதுறித்து பாகிஸ்தான் வெளியுறவுச் செய்திப் பிரிவு இயக்குநர் நூர் ஜாஹிர் கூறுகையில்,

கிறிஸ்ட்டினா லேம்ப் செய்ததைப் போன்ற செய்கைகளை நல்ல பொறுப்புள்ள பத்திரிக்கையாளர்கள்செய்யமாட்டார்கள். அதுவும் இதுபோன்ற பதட்டமான சூழ்நிலையில் அவர் இவ்வாறு செய்தது கண்டிக்கத் தக்கதுஎன்றார்.

இதையடுத்து அந்த நிருபர் தனது போட்டோ கிராபருடன் இன்று இங்கிலாந்துக்கு அனுக்பபிவைப்பட்டுள்ளார்.அங்கு அவர் இதுதொடர்பாக வழக்கைச் சந்திக்க உள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செய்தியாளர்களின் நடவடிக்கைகளைக்கூர்ந்து கவனிக்கும்படி பாகிஸ்தானிய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+