மர்ம பார்சலில் மசாலா - சென்னையில் ஆந்த்ராக்ஸ் பீதி
சென்னை:
அமெரிக்காவில் இருந்து வந்த மர்ம பார்சலில் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் இருக்குமோ என்ற சந்தேகத்தில் நேற்றுசென்னை தலைமைத் தபால் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்த விவவரம் வருமாறு,
தஞ்சையில் உள்ள சீனிவாசபுரத்தில் இருந்து ராஜ்மோகன் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஒரு பார்சல்அனுப்பப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் அதை வாங்க ஆள் இல்லாததால் அந்தப் பார்சல் சென்னைக் திருப்பிஅனுப்பப்பட்டது.
பிறகு சென்னையிலிருந்து தஞ்சைக்கு அனுப்பிவைக்கப்பட்து.
ஆனால் தஞ்சை சீனிவாசபுரத்தில் ராஜ்மோகன் என்று யாரும் இல்லை என்று சொல்லப்பட்டதால், அது மீண்டும்சென்னை தலைமைத் தபால் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னையில் தபால் ஊழியர்கள் அட்நதப் பார்சலை எடுத்தபோது அதிலிருந்து வெள்ளி நிறத்தில் பவுடர் உதிர்ந்துவிழுவதையும், அதைத் தொட்டால் கைகளில் எரிச்சல் ஏற்படுவதையும் கவனித்தனர். மேலும் கண்களும் எரிவதாகதபால் ஊழியர்கள் புகார் கூறினர்.
எனவே இது ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமியாக இருக்கலாம் என்ற பீதியில் அந்தப் பார்சலை எடுத்து ஒரு மூலையில்கவனமாக வைத்துவிட்டு. போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து முகமூடி அணிந்துகொண்டு அந்தப் பார்சலை எடுத்து சென்னை கால்நடை நோய்ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பிவைத்தனர். அங்கு பார்சலில் உள்ள பவுடரில் ஆந்த்ராக்ஸ் இருக்கிறதா என்றுபரிசோதனை செய்து பார்த்ததில், அது வெறும் மசாலாதான் என்பது தெரியவந்தது.
பிறகு ஆந்த்ராக்ஸ் பீதி அடங்கியது.












Click it and Unblock the Notifications