ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மோதியதில் 3 லாரி கிளீனர்கள் பலியாயினர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக் கோட்டையில் உள்ள ஒரு கார் தொழிற்சாலையிலிருந்து கேரளாவுக்குகார்களை ஏற்றிச் செல்வதற்காக சில லாரிகள் வந்திருந்தன.
தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் சாலையின் ஓரத்தில் தங்கள் லாரிகளை நிறுத்தி வைத்திருந்தனர் டிரைவர்கள்.
இந்த லாரிகளின் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் நேற்று காலை அந்த சாலையைக் கடந்துள்ளனர். அப்போதுஅந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரி இவர்கள் மேல் பயங்கரமாக மோதி விட்டு,நிற்காமலேயே சென்றுவிட்டது.
இவ்விபத்தில் பரக்கத் அலி (24), பாஸ்கர் (23) மற்றும் ரமேஷ் (22) ஆகிய 3 கிளீனர்கள் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தனர்.
சுந்தர் என்ற டிரைவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications