இலங்கையில் இந்திய தூதரகத்துக்கு ஆந்த்ராக்ஸ் கடிதம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெள்ளை நிற பெளடர் அடங்கிய 3 கடிதங்கள் வந்தன.இவை ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா அடங்கிய பொடியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தக் கடிதங்கள் இன்று (திங்கள்கிழமை) காலை தூதரகங்களுக்கு வந்தன.
கடந்த வாரம் இதே போன்ற கடிதங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலிய தூதரகங்களுக்கும் வந்தன. ஆனால், இந்தப்பொடிகளை ஆராய்ந்ததில் அதில் ஆந்த்ராக்ஸ் கிருமி ஏதும் இல்லை என்று தெரியவந்தது.
இதற்கிடையே ஆந்த்ராக்ஸை சோதிக்கும் அதி நவீன வசதி கொண்ட சோதனைச் சாலையை இலங்கை உருவாக்கிவருகிறது. அடுத்த வாரம் முதல் இது செயல்படத் தொடங்கும் என்று அந் நாட்டு நலத்துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications