இந்திய விமான தளத்தை தாக்கும் முயற்சி முறியடிப்பு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகரில் இந்திய விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகளைஎல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்) சுட்டு வீழ்த்தினர்.

இந்திய விமானப் படைத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயன்றதுஇதுவே முதல்முறையாகும்.

இந்த மாதம் 1ம்தேதி ஸ்ரீநகர் சட்டசபை வளாகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்தி 34பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஜம்மு- காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு மேலும்அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுறுவதை தவிர்க்கும் விதமாக எல்லைபகுதியிலும் இந்திய படைகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் விமான தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்த முயன்ற தாக்குதலைபி.எஸ்.எப். முறியடித்தது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்ரீநகருக்கு அருகே உள்ள, குயில் ராணுவ விமான தளத்தின் மீது தாக்குதல்நடத்துவதற்காக தீவிரவாதிகளின் தற்கொலை படையைச் சேர்ந்த 4 பேர் பகல் 2.30மணியளவில் மெடடோர் வேனில் வந்தனர்.

அவர்கள் விமான தளத்தின் நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.

பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் வேனில் வந்த 4 தீவிரவாதிகளும்கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் சுட்டதில் இந்திய ராணுவ ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். ஒரு பி.எஸ்.எப். வீரரும், ஒரு விமானப் படை வீரரும் காயமடைந்தனர்.

இந்த விமானப் படைத் தளம் மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வரும் பகுதிகளில்ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+