இப்படி ஒரு தேர்தல் தேவையா?: அதிமுகவுக்கு ஸ்டாலின் சூடு
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின் போது வன்முறை, முறைகேடு, கள்ளஓட்டு, வாக்குஎண்ணிக்கையின் போது முறைகேடு என்று தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால்அதிமுக அரசு தேர்தலே நடத்தாமல் அவர்களுக்கு வேண்டியவர்களை, வேண்டியபதவியில் நியமித்துக் கொள்ளலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக தாக்கியுள்ளார். சென்னையில் அவர்நிருபர்களுக்கு அளித்த காட்டமான பேட்டியின் போது கூறியதாவது:
தேர்தல் வாக்கு பதிவின் போதும் முறைகேடுகள், வாக்கு எண்ணிக்கையின் போதும்முறைகேடுகள். இதுபோன்ற அராஜக தேர்தல் நடத்துவதற்கு பதிலாக அதிமுக அரசுதேர்தலே நடத்தாமல் தமக்கு வேண்டியவர்களை பதவியில் அமர்த்திக் கொள்ளலாம்.
இதனால் அரசுக்கு செலவாகும் பணமும் மிச்சமாகும். மக்களும் தொல்லைகளிலிருந்துதப்பிப்பார்கள்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் மாநகராட்சி தேர்தலில்கட்சிகளின் முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கின. ஆனால் சென்னைநிலவரம் மட்டும் தெரிவிக்கப்படவில்லை.
தற்போது 35 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாக நான் முன்னணியில் இருப்பதால் நான்வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.












Click it and Unblock the Notifications